இன்றைய நவநாகரீக!!! உலகில் பெரும்பாலான குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் வருகிறது. அதுவும் கணவன் மனைவிக்குள்தான் பிரச்சினைகள் அதிகம். திருமணமான ஒரு மாதத்தில் விவாகரத்தில் முடிவடைகிறது. குறிப்பாக நானா? நீயா? என்பதின் பிடிவாதப் போக்குதான் காரணம். இதில் யார் விட்டுக்கொடுப்பது என்பதில் தொடங்கி அனைத்துமே பிரச்சினைதான். தான் மட்டுமே புத்திசாலி என்பது போலவும் மற்றவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்பது போலவும் சிலபேர் நடந்துகொள்வார்கள். அதிலும் கணவன் என்பவன் தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் மட்டுமே முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாய் இருந்தால் அந்த குடும்பம் உருப்பட்ட மாதிரிதான். இதனை ஒரு (தமிழ் தெரிந்த) நண்பனிடம் சொன்னால் திருவள்ளுவரே மனைவியின் பேச்சினை கேட்க கூடாது என்று சொல்லியுள்ளார் எனக்கூறி ஒரு குறளையும் கூறினான்.
செவ்வாய், மே 22
தனித்த மரம்
சிறுவயதில் எங்களுக்கு பொழுதுபோக்கே மாரியம்மன் கோவிலில் இருக்கும் வேப்பமரத்தடியில் விளையாடுவதுதான். பொழுதுபோக்கிற்கென்று எந்த விசயமும் கிடையாது. தொலைக்காட்சி, சினிமா தியேட்டர், பத்திரிகை என்று எதுவுமே பார்த்தறியாத நாட்கள் அவை. தினமலர் பத்திரிகை மட்டும் வசந்தா சைக்கிள் கடையில் வாங்குவார்கள். ஆனால் அதைப்படிக்க மதியம் ஆகிவிடும். சின்னப்பையன்களைத் துரத்திவிடுவார்கள். மதியம் வந்தால் தலைப்புச் செய்திகள் மட்டும் புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமையானால் காலையில் சீக்கிரம் சென்று க்யூவில் நிற்க வேண்டும். சிறுவர் மலர் அப்போதுதான் கைகளில் கிடைக்கும். இல்லையென்றால் இரவு ஏழுமணிக்குத்தான் கிடைக்கும். நிறைய பசங்க படிக்க காத்துக் கொண்டிருப்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)