வியாழன், மே 31

2012 - 2013 பள்ளிக்கல்வி சில தகவல்கள்

1 . 2012 -2013 ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி இயக்குநரின் வாழ்த்துக்களும் சில அறிவுரைகளும் இங்கு கிளிக் செய்து பெறவும்.
2. 2012- 2013 ம் ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி பெற இங்கு கிளிக் செய்யவும்.
3. 2012 ம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை இங்கு கிளிக் செய்யுங்கள்.
4. 2012 - 2013 ம் ஆண்டில் தொடக்க நிலை வகுப்புகளுக்கான அனைத்துப் பாடங்களின் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பற்றிய கையேடுகள் பெற இங்கு கிளிக் செய்யவும்.
5. ஆசிரியர் தகுதிதேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்ப விபரங்கள் இங்கு கிளிக் செய்து தங்களின் விண்ணப்ப எண்ணை அளித்து சரிபார்த்துக் கொள்ளவும்.
6. 1ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கான பொதுப்பாடத்திட்டம் இங்குள்ளது.

புதன், மே 30

PG TRB EXAM 2012 GK AND EDUCATION ANSWER KEY

இங்கு கிளிக் செய்து 2012ல் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வில் இடம்பெற்றபொது அறிவு மற்றும் கல்வியியல் சம்பந்தமான வினாக்களுக்கான விடைகள் பெறவும். இந்த பதில்கள் வேறொரு தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இதில் சில (6 வினாக்களுக்கு) தவறுகள் இருப்பதாக ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளார். பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் மற்றவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

லியோனியின் - சினிமா சீரழிக்கிறதா?சீர்படுத்துகிறதா?

சினிமா சீரழிக்கிறதா? சீர்படுத்துகிறதா? என்ற லியோனியின் சிரிக்கவைக்கும் நகைச்சுவை பட்டிமன்றத்தின் ஒரு சிறிய பகுதி. கீழே உள்ள ப்ளே பட்டனை கிளிக் செய்து கேட்டு ரசியுங்கள்.

திங்கள், மே 28

TET MODEL QUESTIONS LINK

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  போட்டித்தேர்வில் கேட்கப்படும் பாடங்கள் மற்றும் கல்வியியல் சம்பந்தமான  பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் இணைப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஜீன் 3 லிருந்து ஜீலை 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் அறிவித்துள்ளார். காலம் அதிகம் போன்று தோன்றினாலும் படிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஞாயிறு, மே 27

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் பகுதி 4

alaiyallasunami
நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், இலக்கியங்கள் போன்றவை இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவற்றின் இணைப்புகளை மட்டும் தொகுத்து ஏற்கனவே மூன்று பகுதிகளில் வழங்கியுள்ளோம். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களின் இணைப்பு மட்டுமே.  என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. முந்தைய பகுதிகள் செல்ல கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.

சனி, மே 26

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் பகுதி 3

alaiyallasunami
நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், இலக்கியங்கள் போன்றவை இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவற்றின் இணைப்புகளை மட்டும் தொகுத்து ஏற்கனவே இரண்டு பகுதிகளில் வழங்கியுள்ளோம். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களின் இணைப்பு மட்டுமே.  என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. முந்தைய பகுதிகள் செல்ல கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.

வியாழன், மே 24

மயிலிறகு


அலையல்ல சுனாமிஅம்மா அப்பாவை
மறக்க
ஆங்கில வழிக்கல்வி
இனிமேல் மம்மி டாடிதான்

வகுப்பறையில்
அக்கம்பக்கம் பார்க்காமல்
அன்னம்தண்ணீர் உண்ணாமல்
அந்நியனாய் ஒதுக்கப்பட்டேன்
அப்போதுதான் அறிவு வளருமாம்

செவ்வாய், மே 22

வளைந்து கொடுக்கும் பெண்

இன்றைய நவநாகரீக!!! உலகில் பெரும்பாலான குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் வருகிறது. அதுவும் கணவன் மனைவிக்குள்தான் பிரச்சினைகள் அதிகம். திருமணமான ஒரு மாதத்தில் விவாகரத்தில் முடிவடைகிறது. குறிப்பாக நானா? நீயா? என்பதின் பிடிவாதப் போக்குதான் காரணம். இதில் யார் விட்டுக்கொடுப்பது என்பதில் தொடங்கி அனைத்துமே பிரச்சினைதான். தான் மட்டுமே புத்திசாலி என்பது போலவும் மற்றவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்பது போலவும் சிலபேர் நடந்துகொள்வார்கள். அதிலும் கணவன் என்பவன் தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் மட்டுமே முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாய் இருந்தால் அந்த குடும்பம் உருப்பட்ட மாதிரிதான். இதனை ஒரு (தமிழ் தெரிந்த) நண்பனிடம் சொன்னால் திருவள்ளுவரே மனைவியின் பேச்சினை கேட்க கூடாது என்று சொல்லியுள்ளார் எனக்கூறி ஒரு குறளையும் கூறினான்.

தனித்த மரம்

அலையல்லசுனாமி

            சிறுவயதில் எங்களுக்கு பொழுதுபோக்கே மாரியம்மன் கோவிலில் இருக்கும் வேப்பமரத்தடியில் விளையாடுவதுதான். பொழுதுபோக்கிற்கென்று எந்த விசயமும் கிடையாது. தொலைக்காட்சி, சினிமா தியேட்டர், பத்திரிகை என்று எதுவுமே பார்த்தறியாத நாட்கள் அவை. தினமலர் பத்திரிகை மட்டும் வசந்தா சைக்கிள் கடையில் வாங்குவார்கள். ஆனால் அதைப்படிக்க மதியம் ஆகிவிடும். சின்னப்பையன்களைத் துரத்திவிடுவார்கள். மதியம் வந்தால் தலைப்புச் செய்திகள் மட்டும் புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமையானால் காலையில் சீக்கிரம் சென்று க்யூவில் நிற்க வேண்டும். சிறுவர் மலர் அப்போதுதான் கைகளில் கிடைக்கும். இல்லையென்றால் இரவு ஏழுமணிக்குத்தான் கிடைக்கும். நிறைய பசங்க படிக்க காத்துக் கொண்டிருப்போம். 

திங்கள், மே 21

சாரி... மொக்கை பதிவை விரும்புபவர்கள் மட்டும் படிக்கவும்

இன்றைய காலகட்டத்தில் நாம் மிகவும் பாதுகாப்பாக வாழ்வது ரொம்ப முக்கியம். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் நோய்கள் மிகவும் எளிதாகப் பரவுகின்றது. பாதுகாப்பு கவசங்கள் அணிந்துகொண்டு வாழ்வது சாத்தியமா? நம்முடைய பொருள்களை திருடர்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி? என்று ஒரு விரிவான அலசல். 

ஞாயிறு, மே 20

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் பகுதி 2

தமிழ் புத்தகம்
இலவசமாக அதிகமான தமிழ் புத்தகங்களைப் படிக்கவும், தரவிறக்கம் செய்யவும் நிறைய தளங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றினை முந்தைய பகுதியில் பார்த்தோம். மேலும் சில தளங்களின் தொடர்ச்சியை இப்போது பார்க்கலாம்.
புத்தகங்களை வாங்கவோ அல்லது விற்கவோ விரும்புபவர்களுக்கு சிறந்த தளம்   தமிழ் புக்மார்க்கெட். இங்கு புத்தகங்கள் தொடர்பான விளம்பரங்கள், பதிப்பகங்கள்,மதிப்புரை போன்றவை உள்ளன.

வெள்ளி, மே 18

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க

தமிழ் புத்தகம்
தமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தமாகத் தொகுக்கும் ஒரு சிறிய முயற்சி. இன்னும் நிறைய தளங்கள் உள்ளன. நான் தேடியவற்றில் கிடத்த தளங்களை மட்டும் தொகுத்துள்ளேன்.அவற்றில் மிகச்சிறப்பான தளங்கள் எனில் ஓபன்ரீடிங், அழியாச்சுடர்கள்தமிழ் தொகுப்புகள், சிலிக்கான் ஷெல்ப் போன்றவையாகும்.  ஓபன் ரீடிங் தளத்தில் வகைவகையாகப் புத்தகங்களைப் பிரித்து வைத்துள்ளனர்.அவை

வியாழன், மே 17

விகடன் பத்திரிகையிலிருந்து மதன் விலக்கப்பட்டார்


பல ஆண்டுகளாக ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு கேள்வி பதில் எழுதி வருபவர் மதன். அதற்கென்றே வாசகர் வட்டம் உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பத்திரிகைக்காக உழைத்துள்ளார்.இணை ஆசிரியராகவும், கார்ட்டூனிஸ்டாகவும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். ஆனால் விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பிக்கவும் இவருக்கும் நிர்வாகத்திற்கும் பிரச்சினை வெடித்தது. எனவே இவர் பல பொறுப்பிலிருந்து சுமூகமாக விலகிக்கொண்டார். ஆனால் மதனின் கேள்வி பதில்கள் மற்றும் கார்ட்டூன்கள் மட்டும் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தது.  கடந்த 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.

புதன், மே 16

நடுவர் முருகனின் பட்டாசு பேச்சு

உழைப்பின் முக்கியத்துவத்தையும் படிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் மதிப்பிற்குரிய தேனி P.முருகன் அவர்களின் அற்புதமான படபட பட்டாசு பேச்சு. எந்தப் பொருளையும் உருவாக்குபவன் விலையை அவனே நிர்ணயம் செய்கிறான். ஆனால் ஒரு விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்கள் மட்டும் அவனால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை.வேலைக்குப் போகும் தாய் தன் குழந்தையைக் கூட கவனிக்காமல் தன் நேரத்தினை உழைப்பிற்காக அர்ப்பணிக்கிறாள். உழைப்பாளிகள் நமது நாட்டில் சுரண்டப்படுகிறார்கள்.

ஞாயிறு, மே 13

கிராமங்களில் காணாமல் போனவை

கிராமங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பல விசயங்கள் காணாமல் போய்விட்டன. சில தொலைந்து வருகின்றன.அவற்றில் சிலவற்றினை கூகுளின் துணையோடு தொகுத்துள்ளேன். சில பொருட்களின் புகைப்படங்கள் கூகுளில் தேடினாலும் கிடைக்கவில்லை.உதாரணமாக பம்ப்செட் வருவதற்கு முன்னர் கமலையில் நீர் இறைக்கும் உருளை, கமலைக்குழி போன்றவைதான் நீர் இறைக்கப் பயன்பட்டன. . அதில் ஒரு மாட்டுத்தோலிலான பை கட்டி நீர் இறைப்பார்கள். அதன் பெயர்கூடத் தெரியவில்லை.அதன் புகைப்படம் தேடினாலும் கிடைக்கவில்லைஅதுபோல நெல்லினை சேமித்து வைக்கும் குலுக்கை என்று சொல்வார்கள். அதுவும் கிடைக்கவில்லை. இப்படி இன்னும் நிறைய பொருட்கள் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் இருந்து தொலைந்து வருகின்றன. 

வெள்ளி, மே 11

வைத்தியலிங்கபுரம்

இது அப்படி ஒன்றும் பிரபலமான ஊர் இல்லை. நான் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் வருங்காலத்தில் பிரபலமாகும் வாய்ப்பு உள்ளது.  வைத்தியலிங்கபுரம் ஒரு சிறிய கிராமம் . இந்த ஊர் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது. வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அமைந்துள்ளதால் வைத்தியநாதபுரம் என்ற பெயர்தான் ஆரம்பத்தில் இருந்தது. காலப்போக்கில் வைத்தியலிங்கபுரம் என்றாயிற்று. வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் ஒரு சிறிய ரயில்வே ஸ்டேசன் இருந்தது. அதில்தான் அதிகமான போக்குவரத்து நடைபெற்றது. ஆனால் அது பல வருடங்களுக்கு முன்பே அகற்றப்பட்டது. 3 கி.மீ தூரத்திலேயே திருவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேசன் உள்ளதால் இந்த நடவடிக்கை எனக்கூறினர். அதன் போட்டோ கிடைக்கவில்லை. 

செவ்வாய், மே 8

மனைவி புராணம்

அலையல்ல சுனாமி

காளையையும் அடக்க வேண்டாம்
ஊர் கல்லையும் தூக்க வேண்டாம்

டிஸ்கொதே போக வேண்டாம்
எல்சிடி வாங்க வேண்டாம்

சனி, மே 5

ஆனந்த விகடன் கவிதைகள்

2002ம் ஆண்டு ஆனந்த விகடன் ஒரு கவிதைப்போட்டி நடத்தியது. அதில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை 17.11.2002 அன்று ஒரு சிறு இணைப்பாக 75முத்திரை கவிதைகள் என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார்கள். அவற்றில் எனக்குப் பிடித்தமான பத்து கவிதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்ந்துள்ளேன். விருப்பமிருந்தால் உங்களுக்குப் பிடித்த ஒரு கவிதையின் பொருள் வருமாறு நீங்கள் உங்கள் படைப்பினை (கவிதையினை) பகிர்ந்துகொள்ளலாம். பகிர்வு நகைச்சுவையாகவோ , சோகமாகவோ, கிண்டலாகவோ அல்லது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்(ஆத்தாடி எம்புட்டு சாய்சு).

வியாழன், மே 3

ஃபன்னி

ஐய்யோ!!! இது பன்னி இல்லீங்க...ஃபன்னி. அதாங்க இங்கிலீஸ்ல சொல்லுவாங்களே ஆங்... அதான் FUNNY. நீங்கள் பார்த்த வீடியோவாக இருந்தாலும் கொஞ்சம் ரசிக்கலாமே.ஓகே... இப்போ அந்த ஃபன்னி (ம்ம்ம்...FUNNY) வீடியோவைப் பார்க்கலாமா. அனைத்து வீடியோக்களும் ரசிக்க மட்டுமே.
பர்ஸ்ட் வீடியோ செம சூப்பரான வீடியோ. இது ஒரு ஜப்பானிஸ் சர்க்கஸ். பார்த்துக்கிட்டே இருக்கலாம்.

கல்வியியல் வினாக்கள் (Education questions)

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் (Education) சம்பந்தமான  பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. இதனை டவுன்லோட் செய்ய இயலவில்லை. இதனை COPY செய்து WORD Documentல் PASTE செய்து கொள்ளவும். முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும். நிலவைத்தேடி என்ற வலைப்பூவில் 3000 வினாக்களின் தொகுப்பு உள்ளது. தற்போது அதில் முதற்பகுதி வெளியிடப்பட்டுள்ளது. அதனைப்பெற இங்கு கிளிக் செய்யவும். 

  • கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி
  • வெகு நாட்கள் நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்
  • கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
  • நடத்தை கோட்பாட்டின் அடிப்படை - தூண்டல் - துலங்கல்
  • சராசரி நுண்ணறிவு ஈவு - 90 - 109
  • பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது
  • ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்.

புதன், மே 2

TRB BOTANY

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB)  நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வுக்கு (TRB PG BOTANY) தயார் செய்யும் விதத்தில் தாவரவியல் பாடத்திற்கான வினாக்கள் இங்கு தரப்பட்டுள்ளது. முந்தைய வினாக்களைக் காண இங்கு கிளிக் செய்யவும்.