பல ஆண்டுகளாக ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு கேள்வி பதில் எழுதி வருபவர் மதன். அதற்கென்றே வாசகர் வட்டம் உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பத்திரிகைக்காக உழைத்துள்ளார்.இணை ஆசிரியராகவும், கார்ட்டூனிஸ்டாகவும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். ஆனால் விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பிக்கவும் இவருக்கும் நிர்வாகத்திற்கும் பிரச்சினை வெடித்தது. எனவே இவர் பல பொறுப்பிலிருந்து சுமூகமாக விலகிக்கொண்டார். ஆனால் மதனின் கேள்வி பதில்கள் மற்றும் கார்ட்டூன்கள் மட்டும் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தது. கடந்த 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.