நான் இல்லையென்றால் பூமியில்
காற்றும் இல்லை
எனக்கும் கர்வம்தான்
நான் இல்லையென்றால்
பெட்ரோல்... நிலக்கரி
எதுவுமில்லை
கர்வம்தான்
நான் இல்லையென்றால் எந்த
உயிரினமும் உலகிலில்லை
கர்வம்தான்
நான் இல்லையென்றால் பூமியின்
வெப்பம்கூடி சுடுகாடாயிருக்கும்
கர்வம்தான்
மனிதனின் மானமும் காப்பேன்
உயிரையும் காப்பேன்
கர்வம்தான்
உலகில் உயரமானவனும்
நான்தான்
கர்வம்தான்
பரந்துவிரிந்து சிறகடிக்கும்
என்னை மனிதன் ஒருவன்
ஜட்டிக்குள்ள
குட்டிபோட வைத்தான்
அவனுக்கு இது கர்வம்தான்...!!!
எனக்கும் தா... ஒரு வரம்!!
நானும் அவனை வளர்க்கவேண்டும்
என் ஜட்டிக்குள்...!!!