வெள்ளி, அக்டோபர் 26

காக்கா பிடித்தல்

                    சிறிய வயதில் காகம் வடையைக் தூக்கிக்கொண்டு போன கதையில்தான் முதன்முதலாக காகம் அறிமுகமானது. அதில் காகமானது மற்றவர்களை ஏமாற்றும் என்றே கற்பித்தார்கள். பின்பு ஒரு கதையில் புத்திசாலியாக சித்தரிக்கப்பட்டது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் ஒரு காகம் அலையும் எனவும் சிறிதளவு தண்ணீர் உள்ள ஒரு மண்பானையில் கல்லைத்தூக்கி போட்டு நீரை நிறையவைத்து தண்ணீர் குடித்துவிட்டு செல்லும். அப்போது முதல் காகத்தை நிறையவே நேசித்தேன். எங்கள் வீட்டு எதிரில் செல்லும் மின்கம்பியில் வரிசையாக காகம் அமர்ந்திருக்கும் அழகே தனிதான். ஆனால் இப்போது காகத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது. உண்மையிலேயே காகம் இனம் அழிந்துகொண்டு வருகிறதா எனத்தெரியவில்லை. வீட்டு மொட்டை மாடியில் வடாம் காயவைக்கும்போது எதுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ காகத்திற்கு பயப்படுவார்கள். ஆனால் அந்த காகத்தினை கூப்பிட்டு விரதமிடும் நாளில் மட்டும் உணவும் வைப்பார்கள். (ஆனா வடாம் திங்கக்கூடாது.. என்ன ஞாயம் இது) சிலர் தினமும் உணவு வைப்பதை கண்டிருக்கிறேன். 

     

செவ்வாய், அக்டோபர் 23

நானோ

தனிமமாக இருக்கும் நம்மை
உன் தந்தை சேர்மமாக மாற்றுவாரா!

இது வேதியியல் படிக்கும் ஒரு மாணவரின் காதல் கவிதை. சரி தனிமம் என்றால் என்ன? சேர்மம் என்றால் என்ன?

தனிமம் : தனிமம் என்பது தனிப்பட்ட ஒரே வகை அணு. ஒவ்வொரு தனிமத்திற்கும் ஓர் அணு எண் உண்டு.  தங்கம், வெள்ளி, இரும்பு போன்றவை வெவ்வேறு தனிமங்கள் ஆகும். 2006 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் மொத்தம் 117 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றுள் அணுவெண் 1 கொண்ட ஹைட்ரஜன் முதலாக அணுவெண் 94 கொண்ட புளுட்டோன்யம் வரை உள்ள 94 தனிமங்களும் இயற்கையில் கிடைப்பன. இது, சாதாரண வேதியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி வேறு பதார்த்தங்களாகப் பிரிக்க அல்லது அவ்வாறு மாற்ற முடியாதவை ஆகும். இத் தனிமங்களின் இயல்பு கெடாமல் மேலும் பிரிக்கமுடியாத மிகச் சிறிய துகள் அணு எனப்படும். தனது எல்லா அணுக்களிலும் ஒரே அளவான புரோட்டான்களை (protons) கொண்ட பதார்த்த வகையே தனிமம் ஆகும். கால்சியம் என்ற தனிமம் அனைத்து உயிரிகளின், உடல் செயல்பாட்டுக்கும் கட்டாயம் தேவையாகும். கால்சியம் என்றால் என்ன தெரியுமா? அதுதான் சுண்ணாம்பு. லத்தீனில் கால்சிஸ் என்ற வார்த்தைக்கு சுண்ணாம்பு என்பதுதான் பொருள். ஓஸ்மியம் (osmium) அல்லது இருடியம் (iridium) தான் அடர்த்தி மிகுந்த தனிமம் ஆகும்.

செவ்வாய், அக்டோபர் 16

TET Answer Key Oct 2012

14.10.2012 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) நடந்தது. இத்தேர்வில் சுமார் 6.50 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இத்தேர்விற்கான முதல்தாள் (PAPER I) மற்றும் இரண்டாம் தாள் (PAPER II)  உத்தேச பதில்கள் (Tentative Answer Key October 2012)  சில பயிற்சி மையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணைப்பு கீழே உள்ளது. மீண்டும் நினைவூட்டுகிறோம். இவை அனைத்துமே  உத்தேச பதில்கள் மட்டுமே. அதிகாரப்பூர்வ பதில் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


1. TET Paper I
2.TET Paper II

3. TET Paper II
4. TET Paper II
5. TET Paper I & TET Paper II

UPDATE :
ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அதிகாரப்பூர்வ பதில்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணைப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்.

திங்கள், அக்டோபர் 15

TET Answer key Oct 2012

14.10.2012 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) நடந்தது. இத்தேர்வில் சுமார் 6.50 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இத்தேர்விற்கான முதல்தாள் (PAPER I) உத்தேச பதில்கள் (Tentative Answer Key October 2012) வேலூர் பயிற்சி மையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணைப்பு கீழே உள்ளது. 
1. TET PAPER I