காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். இவர் தேங்காய் வியாபாரம் செய்தவர். 1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள். காமராஜரின் தங்கையின் பெயர் நாகம்மாள். தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். பின்பு ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.
விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். 1954ம் ஆண்டு தமிழக முதல்வரானார். காமராஜரின் அமைச்சரவையில் குறைந்த எண்ணிக்கையிலேயே உறுப்பினர்கள் இருந்தனர். தன் ஆட்சிக்காலத்தில் கல்விக்கு பெரும்பணியாற்றினார்.