வியாழன், மே 3

கல்வியியல் வினாக்கள் (Education questions)

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் (Education) சம்பந்தமான  பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. இதனை டவுன்லோட் செய்ய இயலவில்லை. இதனை COPY செய்து WORD Documentல் PASTE செய்து கொள்ளவும். முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும். நிலவைத்தேடி என்ற வலைப்பூவில் 3000 வினாக்களின் தொகுப்பு உள்ளது. தற்போது அதில் முதற்பகுதி வெளியிடப்பட்டுள்ளது. அதனைப்பெற இங்கு கிளிக் செய்யவும். 

 • கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி
 • வெகு நாட்கள் நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்
 • கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
 • நடத்தை கோட்பாட்டின் அடிப்படை - தூண்டல் - துலங்கல்
 • சராசரி நுண்ணறிவு ஈவு - 90 - 109
 • பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது
 • ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்.
 • தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்
 • நினைவாற்றல் என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் - எபிங்கஸ்
 • கற்றலுக்கு உதவாத காரணி - குழுக் காரணி
 • மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
 • சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C. தார்ன் F.C.Thorne
 • முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
 • ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov
 • முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
 • நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
 • உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
 • உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
 • நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
 • நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
 • தொடக்கக் கல்வி பயில வரும் போது குழந்தைகளின் நரம்பு மண்டலம் - 90% வளர்ச்சியடைந்து வருகிறது.
 • உளவியல் சோதனை ஆய்வகத்தை முதன் முதலில் நிறுவியவர் - முதல்வர் லைர்.
 • பிறக்கும் குழந்தையின் மூளையின் எடை சுமார் 350 கிராம்
 • பிறக்கும் குழந்தையின் உயரம் சுமார் 52 செ.மீ.
 • ஆளுமை வளர்ச்சியில் 8 நிலைகள் உள்ளன என்று கூறியவர் - எரிக்சன்
 • ஆய்வில் காணப்படும் பல்வேறு படிகளை உருவாக்கியவர் - ஜான்ரூயி
 • தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எல்லோரையும் ஈர்ப்பது - விளம்பரங்கள்
 • நுண்ணறிவு சோதனை ஏழு வகையான அடிப்படை மனத் திறன்களை உடையது என்று கூறியவர் - தர்ஸ்டன்
 • பிறருடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் நம்மை அறியாமலேயே ஏற்றுக் கொள்ளுதல் - கருத்தோற்றம்
 • முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
 • மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகள்.
 • மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு.
 • முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு.
 • தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் - ஏ.எஸ். நீல்
 • குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்
 • சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - டார்வின்
 • மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? - மனவெழுச்சி நீட்சி
 • குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.
 • சோபி' என்பது என்ன? - ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்.
 • உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர்
 • கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்.
 • ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்.
 • மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.
 • மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் - மனவெழுச்சி.
 • சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை.
 • ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? - மூன்றாம் நிலை.
 • பிறந்த  குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது?  - உடல் தேவை
 • அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார? -எல். தர்ஸ்டன்.
 • தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு
 • பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.
 • மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
 • வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
 • உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை -  பரிசோதனை முறை
 • அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை
 • கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.
 • சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.
 • அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே
 • மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.
 • வாழ்க்கையில் சிறப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.
 • கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எத? - கல்வி உளவியல்
 • பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை -  அகநோக்கு முறை.
 • தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.
 • 'உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்
 • உற்றுநோக்கலின் படிகள் - ஏழு
 • உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்
 • வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? -  உற்று நோக்கல் முறை.
 • பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
 • மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது – தர்க்கவியல்
 • ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?  -  வளருதல்
 • ஒப்புடைமை விதி என்பது - குழுவாக எண்ணுதல்.
 • புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை?  - ஐந்து
 • மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்.
 • ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்
 • உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்
 • உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்
 • உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோ, குரோ
 • எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை - போட்டி முறை
 • நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை.
 • இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.
 • வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை - வினாவரிசை முறை.
 • பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்- ஏ.குரோ, சி.டி.குரோ.
 • தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
 • ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
 • புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி.
 • டோரனஸ் என்பவர் தத்துவவாதி.
 • தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ
 • சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட்
 • சமூக மனவியல் வல்லுநர் - பாவ்லாவ்
 • அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.
 • குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்
 • குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்
 • குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்
 • ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி
 • புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.
 • பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.
 • புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.
 • நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை.
 • மனவெழுச்சி என்பது -  உணர்ச்சி மேலோங்கிய நிலை
 • புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது?  - சூழ்நிலை.
 • ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவரு?  - மெண்டல்
 • ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது?  - அயோவா
 • உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல்
 • தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
 • உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.
 • உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.
 • பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.
 • தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்
 • கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்
 • உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
 • உற்று நோக்கலின் படி - நான்கு
 • லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
 • சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
 • சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.
 • உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
 • கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.
 • பரிசோதனை முறைக்கு வேறுபெயர் - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
 • எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.
 • வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் குமரப் பருவம். ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம்.
 • மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.
 • பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144
 • பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130
 • குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை
 • கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை
 • ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.
 • நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.
 • ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை எனப்படும்.
 • எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.
 • கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி
 • வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.
 • பெட்ரண்டு ரஸ்ஸலின் சமூக மேம்பாட்டிற்கான கணித சமன்பாடு -  Y=f(X,D,M)
 • தார்ண்டைக்கிள் கற்றல் முறை - முயன்று தவறிக்கற்றல்.
 • குமரப்பருவப் பிரச்சனைகளில் ஒன்று - தலைமுறை இடைவெளி
 • தான் என்னும் உணர்வு மெல்ல மறைந்து நாம் உணர்வை குழந்தைப் பெறுவது - சமூகவியல்பு
 • அடைவு ஊக்கியின் அளவினை மதிப்பிடப் பயன்படும் ஆளூமைச் சோதனை - பொருளறிவோடு
 • மேம்பட்ட நினைவிற்கு வழி வகுப்பது - பல்புலன்வழிக்கற்றல்
 • ஜான் டூயியினது கல்விக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி - வாழ்க்கை மையக் கல்வி
 • குறுகிய இடைவெளிகளைப் பூர்த்தி செய்து, காணும் பொருட்களை முழுமைப்படுத்திக் காணும் புலக்காட்சியமைப்பு விதி - மூட்ட விதி
 • ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் - சுவிட்சர்லாந்து
 • புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
 • உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
 • உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
 • வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்
 • பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ
 • முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.
 • மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
 • 'தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.
 • குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
 • தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.
 • வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்
 • உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை
 • ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்
 • பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.
 • குழந்தை வளர்ச்சியில் பாலுணர்ச்சி போன்ற உடல் தேவை நிறைவுகளை விட
 • சமூகப்பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர் - எரிக்சன்
 • குழந்தைகள் சிந்திக்கும் முறைகள் பெரியவர்கள் சிந்திக்கும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடும் என்று கூறிய உளவியலறிஞர் - பியாஜே
 • இயக்கம் - மொழி - ஆயத்த நிலை இவற்றில் கவனத்தை தீர்மானிக்கும் காரணி - இயக்கம் மற்றும் ஆயத்த நிலை
 • ஒருவனது நுண்ணறிவு முதிர்ச்சி நிலையைக் குறிப்பது - மன வயது
 • செயல்மையக் கல்வி ஏற்பாடு யாருடைய கோட்பாட்டின் கல்வி விளைவு ஆகும் - பியாஜே
 • மாணவர்களின் கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
 • வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
 • கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.
 • அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.
 • அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
 • மழலைப் பேச்சு எந்த வயது வரை ிருக்கும் -  4-5 வயதுவரை
 • எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.
 • எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.
 • குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.
 • மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
 • சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.
 • நுண்ணறிவின் தன்மையை விளக்கிட இரட்டைக் காரணி கோட்பாட்டைக் கூறியவர் - சார்லஸ் பியர்மென்
 • வெக்ஸலரின் நுண்ணறிவு சோதனைக்கான வயது - 7-15
 • நுண்ணறிவு ஈவு என்ற சொல்லை பயன்படுத்தியவர் - டெர்மன்.
 • உளவியலறிஞரின் கருத்துப்படி நுண்ணறிவு என்பது - 16 வயது வரை இருக்கும்
 • 20 வயதான ஒருவரின் நுண்ணறிவு ஈவு கணக்கிட தேவைப்படும் கால வயது - 16 வயது
 • சொற்சோதனையை மேற்கொண்டவர் - வெக்ஸ்லர்.
 • ஆக்கத் திறன் மதிப்பீட்டிற்கு உதவும் 3 வகையான சோதனைகளை உருவாக்கியவர் - கில்பர்ட்
 • மின்ன சோடா சோதனையில் அடங்கியவை - 7 மொழிச் சோதனை உருப்படிகள் மற்றும் 3 படச் சோதனை உருப்படிகள்.
 • பொருட்களை புதிய பயன்பாட்டிற்காக பயன்படுத்துதல், - பயன் சோதனை.
 • புதியவனவற்றைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் - கிரகாம் வாலஸ். 
 • பொய்ப் பேசுதல் என்பது  - பிரச்சனை நடத்தை
 • ஒழுக்கமின்மை என்பது - பிரச்சனை நடத்தை
 • ஆங்கிலத்தில் நடத்தையென்பதினை குறிக்கும் குறிப்பெழுத்துகள் - S --> R
 • சி.எஸ். மையர்ஸ் வலியுறுத்துவது - நளமுறை உளவியல்
 • கற்பித்தல் சிக்கலை குறைத்து, கற்பித்தல் நிலையினை சுருக்குவது - நுண்நிலைக் கற்பித்தல்
 • மனித வளர்ச்சி = மரபு நிலை x சூழ்நிலை
 • தூண்டலுக்கும் துலங்கலுக்கும் இடையே காணப்படும் இடைவெளி 0,03 விநாடி
 • பரம்பரையாக வரும் மரபு நிலை - உயிரியல் மரபு நிலை
 • செயல் தொடர் ஆராய்ச்சியினை முதன் முதலில் வலியுறுத்தியவர் - ஸ்டீபன் எம். கோரி
 • அக நோக்கு முறையைப் பற்றி விவரித்தவர் - இ.பி. டிட்சனர்
 • சிக்கல் தீர்வு முறையை சோதனையை அறிமுகப்படுத்தியவர் - ஆஸ்போர்ன்.
 • புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர் - மால்ட்ஸ் மேன்
 • புதுமையான தனித்தன்மையுள்ளவற்றை புனையும் திறன் - ஆக்கத்திறன்.
 • ஆக்கத்திறனும், நுண்ணறிவும் வெவ்வேறான பண்புகள் என்று கூறியவர் - டரான்சு
 • மாணவனின் சிந்தனை வினாவிற்கான சரியான விடைகளைத் தேடி குவிந்து செல்லும்
 • முறை - குவிச்சிந்தனை முறை
 • தார்ஸ்டன் கருத்துப்படி நுண்ணறிவு - ஏழு வகைப்படும்.
 • நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.
 • நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புக' என்பதற்கு பதில்...?   -  ஒலி எனக்கு (Sound to me)
 • கவனம்-புலன்காட்சிகள் அடிப்படையாகும்.
 • கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது.
 • ஒருவனுடைய கற்கும்திறன் உடல் - உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.
 • வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது.ரா
 • முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7 இருக்கும்.
 • கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.
 • சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்.
 • பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.
 • இரட்டைக் காரணி கோட்பாட்டில் சிறப்புக் காரணிக்கான எழுத்து - எஸ்
 • பொதுக் காரணியை தீர்மானிப்பது - மரபு
 • இரட்டைக் காரணி கோட்பாட்டில் பொதுக் காரணிக்கான எழுத்து - ஜி.
 • நுண்ணறிவுக் கோட்பாடுகள் - மூன்று வகைப்படும்.
 • நுண்ணறிவினை மூன்று வகையாக பிரித்தவர் - தார்ன்டைக்
 • நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - ஆல்பிரட் பினே.
 • நுண்ணறிவு என்பது பொதுத் திறன் என்று கூறுபவர்கள் - ஒற்றைக் காரணி கோட்பாட்டினர்.
 • ஒருவரின் நுண்ணறிவு ஈவை பொதுத் திறன் மதிப்பினைக் கொண்டு அளவிட முடியும் என்று கூறியவர் - ஆல்பிரட் பினே.
 • ஒருவனது உள்ளத்திலுள்ளவற்றை அவன் விருப்பு, வெறுப்பின்றி ஆராய்ந்து விவரித்தாலும், அவ்வாறு விவரிக்கப்பட்டவற்றைப் பகுத்தாய்ந்து வகைப்படுத்தலும் அகநோக்கு முறையாகும் என்று கூறியவர் - வண்ட்டு
 • மனிதர்கள் மேற்கொள்ளும் தற்காப்பு நடத்தைகள் - 60
 • டாரன்சு கூறிய ஆக்கத் திறன் பண்புகள் - 5
 • ஆக்கத் திறன் அடிப்படையில் சிக்கல் தீர்க்கும் முறையில் ஆஸ்போர்ஸ் உருவாக்கிய படிகள் - 5
 • மெதுவாக கற்போரின் நுண்ணறிவு ஈவு - 70 முதல் 90
 • ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தால் அவர்களின் நுண்ணறிவு ஈவு - 87
 • கற்றலில் கற்றலினை விளக்கியவர் - வெர்திமர் பொருத்தப்பாடு வாழ்க்கையின் அடிப்படை என்று கூறியவர் - ஹெட்பார்டு
 • கற்பதற்கான 5 படிகளை அறிமுகப்படுத்தியவர் - ஹெட்பார்டு
 • தனியாள் நுண்ணறிவு சோதனை மூலம் மீத்திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - 140
 • டெர்மன் தனது சோதனைக்கு மீத் திறன் உடைய மாணாக்கர்களின் எண்ணிக்கை - 1508
 • டெர்மன் நுண்ணறிவு சோதனை மூலம் மீத் திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - 140
 • உயர் அறிவாண்மை உள்ள குழந்தைகள் தங்களிடம் உள்ள 3 உயர் திறமைகள் மூலம் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள செயல்களை செய்கின்றனர் என்று கூறியவர் - தென்சாலி
 • குற்றம் புரியும் பண்பும், பாரம்பரியம் என்ற ஆய்வு செய்த உளவியல் வல்லுநர் - கார்ல்பியர்சன்
 • புலன் இயக்கப்பருவம் என்பது - 0-2 ஆண்டுகள்.
 • நுண்ணறிவு என்பது தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் ஓர் ஆற்றல் என்று கூறியவர் - பீனே.
 • ஏபிஎல் என்பது - செயல் வழிக்கற்றல்
 • குழந்தைகளின் உள மருத்துவ விடுதி முதன் முதலில் நிறுவப்பட்ட இடம் - சிகாகோ
 • கெஸ்டால்ட் கொள்கையை பின்பற்றி தார்ண்னடக்கின் விதி - உடைமை விதி
 • கற்றலின் தேக்க நிலை - பிளாட்டோ
 • மனவளம் குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 80க்கும் கீழ்
 • அருவாண்மைச் சோதனைகளில் மிக குறைவான நுண்ணறிவு ஈவு பெறுபவர்கள் - மனவளம் குன்றிய குழந்தைகள்
 • வகுப்பில் பிற்பட்டக் குழந்தைகளாக கருதப்படுபவர்களின் சதவீதம் 8 முதல் 10%
 • வகுப்பில் உயர் அறிவான்மைக் குழந்தைகளின் சதவீதம் 3 முதல் 5%
 • திருடுதல் என்பது - நெறிபிறழ் நடத்தை
 • பதட்டம் என்பது - மிதமான மனநோய்
 • மனச்சிதைவு என்பது - தீவிரமான மன நோய்
 • உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன்.
 • மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள் நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
 • தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - மரபு மற்றும் சூழ்நிலை
 • தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் - டைலர்.

3 கருத்துகள்:

 1. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா29 ஜூன், 2012

  nomber podungappa vinakkalukku

  பதிலளிநீக்கு
 3. பிறரை பற்றி அறிந்துகொள்ள உதவுவது அகநோக்கு முறை அல்லது உற்று நோக்கு முறை இதில் எது சரி

  பதிலளிநீக்கு