ஞாயிறு, மே 13

கிராமங்களில் காணாமல் போனவை

கிராமங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பல விசயங்கள் காணாமல் போய்விட்டன. சில தொலைந்து வருகின்றன.அவற்றில் சிலவற்றினை கூகுளின் துணையோடு தொகுத்துள்ளேன். சில பொருட்களின் புகைப்படங்கள் கூகுளில் தேடினாலும் கிடைக்கவில்லை.உதாரணமாக பம்ப்செட் வருவதற்கு முன்னர் கமலையில் நீர் இறைக்கும் உருளை, கமலைக்குழி போன்றவைதான் நீர் இறைக்கப் பயன்பட்டன. . அதில் ஒரு மாட்டுத்தோலிலான பை கட்டி நீர் இறைப்பார்கள். அதன் பெயர்கூடத் தெரியவில்லை.அதன் புகைப்படம் தேடினாலும் கிடைக்கவில்லைஅதுபோல நெல்லினை சேமித்து வைக்கும் குலுக்கை என்று சொல்வார்கள். அதுவும் கிடைக்கவில்லை. இப்படி இன்னும் நிறைய பொருட்கள் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் இருந்து தொலைந்து வருகின்றன. 

இன்னும் சில வீடுகளில் புழக்கத்தில் இருக்கும் பொருள்கள் என்றால் அது அம்மி, ஆட்டுக்கல், உரல், உலக்கை, திருகை போன்றவை. மின்சாரத் தட்டுப்பாட்டினால் இது போன்ற பொருட்கள் இன்னும் கொஞ்சம் உயிரோடு உள்ளன.
அலையல்ல சுனாமி
திருக்கை


அம்மி

அலையல்லசுனாமி
உரல்

ஆட்டுக்கல்


கிராமங்களில் போக்குவரத்து என்றாலே அது மாட்டு வண்டியும், குதிரை வண்டியும்தான். எங்கள் ஊர் அரசு மருத்துவமனையின் முன்பு நிறைய குதிரை வண்டி நிற்கும். அப்போதெல்லாம் அதுதான் ஆம்புலன்ஸ் வண்டி. பல வருடங்களுக்கு முன்பே அவை தன் அடையாளத்தினை இழந்து விட்டன. அவற்றினை வைத்து பொழப்பு நடத்தியவர்கள் இப்போது என்ன செய்து கொண்டு இருப்பார்கள் என்பது கேள்விக்குறி.

கிராமம்
குதிரை வண்டி
வயலினை உழவு செய்வதற்கு மாட்டு வண்டியை விட்டால் வேறு வழியில்லை. இப்போது உழவு செய்ய நிலமே இல்லை. மாடுகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. கிணறுகளில் நீர் இறைக்க பல வழிமுறைகளை கடைப்பிடித்தனர். அதில் முக்கியமானது கமலை, ஏற்றம் , காலால் நடந்து கொண்டே நீர் இறைத்தல் போன்றவை. அவை எல்லாமே எப்போதோ காணாமல் போய்விட்டன. 
கிராமம்


கிராமம்
கமலை இறைத்தல்











விறகு அடுப்பு, பனை ஓலையில் செய்த முறம், கிலுகிலுப்பை, பொட்டி, விசிறி போன்றவை, கீரை கடையும் மத்து, அரிக்கேன் லைட், ஊர் கல், பழைய ஐந்து பைசா, கோலி சோடா , சுமைகளை இறக்கி வைக்கப் பயன்படும் சுமைதாங்கி கல் , காதிலும் மூக்கிலும் நகைகள் அணியும் கிராமத்துப்பெண் இப்படி நிறைய விசயங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து தொலைந்து விட்டன.

முறம்








கிலுகிலுப்பை

பனைஓலை பொருட்கள்











விச்சு


ஊர் கல்

சுமைதாங்கி



















தமிழக பாரம்பரிய விளையாட்டுக்கள் அடியோடு ஒழிந்துவிட்டன. எல்லாக் குழந்தைகளும் தொலைக்காட்சிக்கும், வீடியோ கேமுக்கும், கிரிக்கெட்டுக்கும் மாறிவிட்டனர். பல குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பும் கிடையாது. அடுக்கு மாடியில் பூட்டப்பட்ட அறையினுள் துணைக்குகூட இன்னொரு குழந்தைகூட இல்லாமல் (நாம் இருவர் நமக்கு ஒருவர் கலாச்சாரம்) தனியாக விளையாடும் பரிதாபம். கிராமத்தின் கலாச்சாரம், பாரம்பரியத்தை மீட்டெடுப்பது மிகவும் கஷ்டமான விசயம் என்றாலும் சிலவற்றையாவது பாதுகாப்போம்.
தட்டாங்கல்


காயா? பழமா?

ஒரு குடம் தண்ணியெடுத்து...










பாண்டி ஆட்டம்

தாவி விளையாடுதல்

கண்ணாமூச்சி

பல்லாங்குழி




47 கருத்துகள்:

  1. கிராமத்துக்கு சென்ற நினைவுகள் ...

    பதிலளிநீக்கு
  2. எங்கள் வீட்டில் குலுக்கை நான் மூணாவது நாளாவது படிக்கும் போது இருந்தது. உள்ளே இறங்கி தானியம் (கம்பு, Millet)எடுத்து வெளியே தந்தால் எனக்கு 50 காசு தருவேன் என்பார்கள் என் அன்னை. 50 காசுக்கு ஆசைப்பட்டு உள்ளே குதித்து விட்டு மீண்டும் வெளியே வருவதற்குள் நான் படும் பாடு அப்பப்பா..,

    உள்ளே தானியம் குலுக்கை நிறைய இருந்தால் தப்பித்தோம், கொஞ்சம் ஆழத்தில் இருந்தால் அவ்வளவுதான் உள்ளே குதித்ததும் சேற்றில் கால் உள்ளே இறங்குவது போல் தாழ்ந்துவிடும் சில நேரங்களில் உள்ளே தேள், பூரான் போன்றவை இருக்கும் அதையும் சமாளிக்க வேண்டும் எல்லாவற்றையும் சமாளித்து, தானியம் எடுத்துக்கொடுத்து வெளியே வந்து சேர்ந்தால் தான் பேசிய பைசா கிடைக்கும்.

    பைசாவுக்காக ஒருபோதும் உள்ளே குதிப்பதில்லை. உள்ளே இறங்கி தானியம் எடுத்தல் ஒரு நகைச்சுவையான விளையாட்டாக இருக்கும். அந்த விளையாட்டின் போது என் அன்னையின் முகத்தில் தோன்றும் புன்னகையை பார்க்கும் ஆவலில் பல முறை குலுக்கைக்குள் குதித்ததுண்டு.

    ஒரு குலுக்கை குறைந்த பட்சம் ஆறு அடியாவது (6 Feet) இருக்கும். நான் பிறந்து வளர்ந்த அந்த கிராமத்தில் எனக்கு தெரிந்து, இப்போது யார் வீட்டிலும் குலுக்கை இருப்பதற்கு சாத்தியம் இல்லை ..!

    நல்ல தேடல் விச்சு சார்.., சில நினைவுகளை மீட்டு தந்தமைக்கு நன்றி ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதே அனுபவங்கள்தான். உள்ளே இறங்கக்கூட பயமாக இருக்கும்.

      நீக்கு
    2. வரலாற்று சுவடுகள்..நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கத்தேவை இல்லையே.இந்த ஆறு,எழு அடி உள்ள நெல் குதிர்களின் அடியில் சின்னதாக கதவு போன்ற அமைப்பும் இருக்குமே.அந்த அரை அடி நீளம் அகலம் உள்ள கதவை திறந்து மிக சுலபமாக தானியங்களை எடுக்கலாமே.நானும் இந்த முறை குதிர்களை என் சிறிய வயதில் நெல் விவசாயம் பண்ணும் கிராமத்து வீட்டில் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  3. இனிய தேடல் ..

    இனிய அன்னையர் தின வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  4. நினைவுகளை மீட்டெடுக்கும் அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா13 மே, 2012

    கிராமங்களில் காணாமல் போனவை//

    அவ்வவ் ...என்ன சொல்லுரிங்க உங்க கிராமத்தில் காணாம போயிடுச்சா ....இவ்வளவு பொறுப்பிலாமல் இருந்த உங்க கிராம மக்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கலை. நீங்க வந்துதான் எங்கள் கிராம மக்களை பொறுப்பா பார்த்துக்கணும்.

      நீக்கு
    2. பாருங்க இந்தக் காக்காவை.என்ன அருமையான பதிவு.அதுக்கு என்னமா கேள்வி கேக்குது.காக்காஆஆஆஆஆ !

      நீக்கு
    3. எனக்கும் சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு கலை.

      நீக்கு
  6. பெயரில்லா13 மே, 2012

    நல்லப் பதிவுங்க அண்ணா ...நீங்க சொல்லுறது சரி தானுங்க அண்ணா ...

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா13 மே, 2012

    அண்ணா நான் நகரத்தில் தான் இருந்திணன் ...ஆனாலும் நீங்கள் சொன்ன எல்லா விளையாட்டுக்களும் இண்டும் நாங்கள் விளையாடிக் கொண்டு தான் இருக்கோம் ...

    கிராமம் எல்லாம் போனால் இன்னும் நிறைய விளையாடுவோம் ..

    விளையாட்டுக்கள் காணமல் போனது என்பதில் எனக்கு உடன்பாடில்லை அண்ணா ...

    நீங்க வளர்ந்துடீங்க ....இப்போ நீங்க விளையாடல என்பதால் அப்புடிலாம் சொல்லப் பிடதூஊஊஊஊஊஊஊஉ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் ஊருக்கு வாங்க கலை. விளையாடச் சொல்லிக்கொடுங்க.

      நீக்கு
  8. பெயரில்லா13 மே, 2012

    நான் இப்பக் கூட போனில் சண்டைப் போட்டால் காயா பழமா கேப்பெனோ ...அவ்வவ் இதுலாம் காணமல் போகல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலை உங்ககூட பழம். நிறைய விளையாட்டுக்கள் உண்மையிலேயே சிறுவர்களால் இப்போது விரும்பப்படுவதில்லை. டிவியின் ஆக்கிரமிப்பால் என்பது உண்மை.

      நீக்கு
  9. அருமையான பதிவு. மிகவும் பயனுள்ள பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  10. very good information ,we people know about that games,but the children of nowdays were not known about this.this is correct.

    பதிலளிநீக்கு
  11. very good information ,we people know about that games,but the children of nowdays were not known about this.this is correct.

    பதிலளிநீக்கு
  12. கிராமத்து வாசனையோடு அருமையான பதிவு விச்சு.ஆட்டுக்கல்,அம்மி,திருகை,மாட்டு வண்டில்,பனையோலைப் பொருடகள் கண்டிருக்கிறேன்.விளையாட்டுக்கள் கண்டதில்லை.ஆனால் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.உங்கள் தேடுதலுக்கும் அதைப் பதிவிட்டதுக்கும் நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் இதில் பல பொருட்களை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். நன்றி ஹேமா.

      நீக்கு
  13. மாடுகளோட அந்த சாணி நாத்தமும் ஒழிந்தது. அது ஒன்னு தான் நல்ல விஷயம். வரப்புகளை எடுத்து விட்டு கூட்டுப் பண்ணை ஒன்று தான் வழி; ஆனால் இந்தியாவில் மணிதனின் ஊழலுக்கு அது நடக்க வழி இல்லை. ஒரு நாளைக்கு 20 ரூபா விவயாசயக் கூலிக்கு ஆட்கள் எதிர்பாப்பது தவறு. Accept technological advances like western countries.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவசாயத்தினை மதிக்காததால் எல்லா நிலங்களும் ப்ளாட்டுகளாக மாறி வருகின்றன.

      நீக்கு
  14. பெயரில்லா14 மே, 2012

    அத்தனை பொருட்களோடும் ஆடி விளையாடியது நினைவிற்கு வருகிறது. . தேடலிற்கு நன்றி. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா. தங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. நகர்ப்புறங்களில்தான் இவை காணாமல் போய்விட்டதென நினைத்தேன்.. கிராமங்களிலுமோ? அவ்வ்வ்வ்வ்:))

    அழகான கிடைத்தற்கரிய படங்கள்.... நாமே பலவற்றை படங்களில்தான் பார்க்கிறோம்.. அப்போ அடுத்த தலைமுறை????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமோ!! ஆதிரா அந்த கலையை கொஞ்சம் கண்டிச்சு வையுங்க.ஒரு சப்போர்ட்டுக்குத்தான்.ப்ளீஸ் வாங்க.

      நீக்கு
  16. அட! மறந்துபோன பல பொருட்களை நினைவூட்டிய பதிவு. அருமை!

    முறம் மட்டும் ஒன்னு வச்சுருக்கேன். அந்தக்காலத்துலே பேப்பர் கூழ் அரைச்சு அதுலே பூசி வைப்பாங்க, ஓட்டைகளில் தானியம் கொட்டாமல் இருக்கணுமே என்று.

    நான் வெள்ளை நிற பெயிண்ட் அடிச்சு வச்சுருக்கேன். நியூஸியின் ஒரே முறம்:-))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி கோபால். பேப்பர்கூழால் செய்த பெட்டிகள் இன்னும் என் ஞாபத்தில் மட்டுமே உள்ளன.தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

      நீக்கு
  17. தங்களை அன்போடு அழைக்கிறேன் வலைச்சரம் .

    பதிலளிநீக்கு
  18. அஹா கிராமத்துக்கே போய்ட்டு வந்த மாதிரி இருக்கு அருமை அருமை .

    பதிலளிநீக்கு
  19. சிறப்பான பதிவு சார் ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  20. காணாமல் போன பொருட்களின் நினைவாவது நமக்கு இருக்கே. வரும் தலைமுறைக்கு நினைக்கவும் எதுவும் இருக்காது. தமிழ்நாட்டில் மின்வெட்டு, காஸ் தட்டுப்பாடு காரணமாய் பிள்ளைகளுக்கு ஆட்டுக்கல்லும், அம்மியும், அரிக்கேன் லைட்டும், விறகடுப்பும், விசிறிமட்டையும் தெரியவந்துள்ளது. அதற்காகவே முதல்வர் அம்மாவைப் பாராட்டலாம்.

    பழைய நாட்களை நினைத்து ஆதங்கப்படவைத்தப் பதிவு. பகிர்வுக்கு நன்றி விச்சு.

    \\கமலையில் நீர் இறைக்கும் உருளை, கமலைக்குழி போன்றவைதான் நீர் இறைக்கப் பயன்பட்டன. . அதில் ஒரு மாட்டுத்தோலிலான பை கட்டி நீர் இறைப்பார்கள். அதன் பெயர்கூடத் தெரியவில்லை.\\

    அதன் பெயர் சால் என்று நினைக்கிறேன். ஒரு பழமொழி கூட சொல்வார்களே... ஊசி போல தொண்டையாம், சால் போல வயிறாம் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.சால் என்பது சரியாக இருக்கலாம்.

      நீக்கு
  21. பழமையை நினைவு படுத்தும் மிக அழகான பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  22. நல்லதொரு பகிர்வு,தேடினால் பல புழக்கத்தில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் விச்சு சார்!உண்மைதான்!பாரம்பரிய பொருட்கள் மட்டுமல்ல,பாரம்பரிய விளையாட்டுகளும் கூடவே வழக்கொழிந்து போய் விட்டன தான்!நாகரீகம்,ஹும்!!!!!!உங்களுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ,இந்தியாவில் காந்தி காலத்தில் விடுதலைப் போரின் ஓர் அங்கமாக சுதேசிய விளையாட்டுகள்,அந்தக் காலத்தில் சித்திரைப் புது வருட நாளன்று விளையாடப்படுவதை அண்ணல் தொடக்கி வைத்தார்!அது சுதந்திரத்தின் பின்னர் வழக்கொழிந்து போயிற்று.இலங்கையில் எங்கள் கிராமத்தில் மட்டுமே இது நாள் வரை கொண்டாடப்பட்டு வருகிறது.எதிர்வரும் 2019-ஆம் ஆண்டில் நூறாவது சுதேசிய திருநாட் கொண்டாட்டத்துக்கு இப்போதே பூர்வாங்க வேலைகள் தொடங்கியிருக்கிறார்கள்.ஐம்பதாவது(பொன்விழா)விழாவுக்கு ம.போ.சி அவர்கள் வந்திருந்தார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபோன்ற தகவல்கள் புதியதாக உள்ளது. தங்கள் வருகைக்கு நன்றி தோழரே.

      நீக்கு
  24. என்ன நண்பரே...
    இன்னும் கொஞ்ச காலத்துல கிராமமே காணாமல் போகப் போகிறது.... தெரியாதா உங்களுக்கு....?

    பதிலளிநீக்கு
  25. கமலையில் நீர் இறைத்த கிட்ண அண்ணனும்,குலுக்கையில் நெல் சேமித்து வைத்த நல்லப்பன் வீடும் இன்று தன் அடையாளத்தை இழந்து.அதுபோலவே மற்ற,மற்ற பொருட்களும்/

    பதிலளிநீக்கு
  26. அம்மில புதினா அரைச்சு, அந்தம்மியிலேயே சாதம் போட்டு பிசைஞ்சு கொடுப்பாங்க அதன் ருசி இருக்கே அடடா, அதேப்போல கல்சட்டில கீரை கடைஞ்சு சாதம் புரட்டி குடுபாங்க. ம்ம்ம் அந்த காலம் மீண்டும் வருமா?

    பதிலளிநீக்கு
  27. இவைகளெல்லாம் இப்பொழுது மரங்களில் செய்யப்பட்டு ஷோ கேஸ் களை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.. இதை நினைத்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லை..

    எனது விளையாட்டு பருவ நினைவுகள்,
    "கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 1 "
    http://www.theblossomingsoul.blogspot.in/

    பதிலளிநீக்கு
  28. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    பதிலளிநீக்கு