திங்கள், ஏப்ரல் 9

கல்வியியல்

ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB)  நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு.  முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.


1.நுண்ணிலை கற்பித்தல் என்பது - திறன் குறித்தது
2.ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது- செய்து அல்லது செயல்
3. ______மாற்றத்தை கற்றல் ஏற்படுத்தும் - நடத்தை

4.மதிப்பீட்டு கல்வி உளநலக்கல்வி ____________ ஆல் போதிக்கப்படுகிறது - எந்த பாடத்தினை கற்பிக்கும் எந்த ஆசிரியராலும்
5.மனித வளர்ச்சி முன்னேற்றம் ____________ நிலையிலிருந்து ஆரம்பிக்கிறது - பிறப்பதற்கு முன்
6.திட்ட வழிக்கற்றல் என்பது _________உள்ளடக்கியது - நேர்கோட்டு மற்றும் கிளைவழி
7.தனியாள் சோதனை எனும் ஆய்வை மேர்கொள்பவர் - ஆசிரியர்
8.நம் பள்ளிகளில் கல்வி தொழில்மயமாதல் __________நிலைகளில் ஆரம்பமாகிறது - மேல்நிலைக்கல்வி
9.புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை
கரும்பலகை திட்டம் மேம்படுத்தப்பட்டது - ஆரம்பப்பள்ளிகளில்
10.சிறந்த நினைவாற்றல் மிக்கவராக கருதப்பட்டவர் - மெக்காலே
11.1983ம் ஆண்டு அக்டோபர் திங்கள் அன்று அமைதிக்கல்விக்கான முக்கியமான  கொள்கை மேற்கொள்ளப்பட்ட இடம் - குவாலியர்
12.தேசிய ஒருமைப்பாட்டின் வரையறை என்பது- நாட்டை ஒருமைப்படுத்தும் நாட்டு மக்களின் சங்கமிக்கும் உணர்ச்சிகள்
13.மீத்திறன் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு அளிக்கும் கல்வி - சிறப்பு கல்வி
14.சூநிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர்- கெல்லாக்
15.எந்தப்பல்கலைக்கழகம் பல்வேறு இடர்களைத்தாண்டி மக்களை சென்றடைகிறது - திறந்த வெளி பல்கலைக்கழகம்
16.பொது தொடர்பு சாதனங்களில் அடையும் கல்வி எப்போது வெற்றி பெறுகிறது - நம்நாடு பொது தொடர்பு சாதனங்களை வேண்டிய அளவு பெறும்போது
17.பெண்கள் கல்வி பற்றி ஆராய தேசிய பெண்கள் கல்வி கமிட்டி நியமித்த முதல் அமைச்சர் - திரு பக்தவச்சலம்
18.காட்சி கேள்வி கருவி - தொலைக்காட்சி
19.பள்ளிக்கு வெளியே கல்வி என்பது - எந்த வயதினருக்கும் பள்ளிக்கு வெளியே கற்பிப்பு
20.மாண்டிசோரி மழலையர் பள்ளி முதலில் எங்கு ஆரம்பிக்கப்பட்டது - இத்தாலி
21.யுட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1854
22.சென்னை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1857
23.MLL என்பது - குறைந்த அளவு கற்றல் திறன்
24.NCERT ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1961
25.மாஸ்லோவின் அறிவு படிநிலை - 7
26.சார்பெண்ணம் என்பது - ஒருபுற சார்புடைய கருத்துக்களை கொண்ட மனப்பான்மை
27.இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதை - காபூலிவாலா(2 1/2 வயது ஆண்குழந்தை மினி)
28. தமிழ்நாட்டில் மாண்டிசோரி பள்ளி எங்குள்ளது - சென்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் மேல்நிலைப்பள்ளி
29.தாராசந்த் குழு - 1948
30.கோத்தாரிக்கல்வி குழு - 1964-66

1 கருத்து:

 1. அருமையான பதிவு

  தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
  தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ் போஸ்ட்

  To get the Vote Button

  தமிழ் போஸ்ட் Vote Button

  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

  நன்றி
  தமிழ் போஸ்ட்

  பதிலளிநீக்கு