ஞாயிறு, ஜூலை 29

அன்புடன் காதலிக்கு

நான் நலம்...
உன் நலமறிய ஆவல்...


நீ எப்போதோ 
தப்பும் தவறுமாய் எழுதிய
காதல் கடிதத்தை இப்போதும்
படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்!


நாம் சுற்றி சுற்றி
ஆடிய வேப்பமரமும்
வெட்டப்பட்டுவிட்டது!

வெள்ளி, ஜூலை 27

PG EXAM RESULT 2012

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய 2012 -2013 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான இணைப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு உத்தேசமாக அழைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் பெற இங்கு கிளிக் செய்யவும்.

ஞாயிறு, ஜூலை 22

பொழுது போகவில்லையா?

இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து படங்களும் கூகுள் தேடலில் கிடைத்தவை. மூட மனிதர்களின் மூடநம்பிக்கைகள்தான் இவை.இப்போதுள்ள பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பதே கஷ்டம். அதிலும் தவளைக்கும் பெண்ணுக்கும் கல்யாணமாம். யாருக்கு நன்மையோ இல்லையோ? சுற்றியுள்ளோருக்கும் மீடீயாக்களுக்கும் நல்லா பொழுது போகும்.
அலையல்ல சுனாமி

பெண்ணுக்கு தவளை என்றால் ஆணுக்கு நாய்தான். நாய் வாழ்க்கை என்பது இதுதானோ?

ஞாயிறு, ஜூலை 15

TET Tentative Answer key 2012

12.07.2012 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுமார் 6.50 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இத்தேர்விற்கான உத்தேச பதில்கள் APPOLO STUDY CENTRE வெளியிட்டுள்ளார்கள். அதன் இணைப்பு கீழே உள்ளது. 
TET Paper I
TET Paper II

இத்தேர்விற்கான உத்தேச பதில்கள் விடியல் பயிற்சி மையத்தாரும் வெளியிட்டுள்ளார்கள். அதன் இணைப்பு கீழே உள்ளது.
TET Paper I
TET PAPER II MATHS & SCIENCE
TET PAPER II SOCIAL SCIENCE

SUCCESS ACADEMY தாம்பரம் உத்தேச பதில்களின் இணைப்பு தாள் 1 மற்றும் தாள் 2 - சமூக அறிவியல்

PAPER II அதிகாரப்பூர்வ பதில்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) வெளியிடப்பட்டுள்ளது.
CHILD DEVPT AND PEDOGOGY
TAMIL
ENGLISH
MATHS AND SCIENCE
SOCIAL SCIENCE

வியாழன், ஜூலை 12

திரிபுக்காட்சி



முகத்தில் தண்ணீர் பட்டது
என்னவனாகத்தான்
இருக்கவேண்டும்
காலையில் அவன்
என்னை எழுப்பும்
ஸ்டைலே அதுதான்!

ஞாயிறு, ஜூலை 8

பெண்களை இம்ப்ரஸ் செய்வது ! காமெடி கலாட்டா !

ஒரு பெண்ணை இம்ப்ரஸ் பண்ணுவதற்கு ஒவ்வொரு ஆணும் பல முயற்சிகளை மேற்கொள்வான். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு காரணத்திற்காக இம்ப்ரஸ் ஆகலாம். ஏதாவது உதவி செய்வது, ஸ்டைலாக ஏதாவது (கோமாளித்தனம்) செய்வது...

புதன், ஜூலை 4

கமு.. கபி


கல்யாணத்துக்கு முன் கல்யாணத்துக்குப்பின்
அன்பே லூசே
நீ பேசினால் காதில் தேன் பாய்கிறது வாயை கொஞ்சம் மூடு
உனக்கு இந்த டிரெஸ் சூப்பர் என்னடி டிரெஸ் இது.. பிச்சைக்காரி மாதிரி
மொபைலில் நீ பேசிக்கிட்டே இருக்கனும் ம்ம்.. அப்புறம்.. சரி.. வை
உன் கை பட்டா எல்லாமே சூப்பர் கையை வச்ச வெட்டிருவேன்
உன் பக்கத்தில் உட்கார்ந்தா சொர்க்கம்  தள்ளிதான் உட்காரேன்
நீ சமைச்சாலே வாசனை தூக்குது என்னடி குழம்பு வச்சிருக்க.. உப்புமில்லை. உறப்புமில்லை
நீ பார்த்தாலே பத்திக்குது நீ பார்த்தாலே பத்தி எரியுது
நீ சிரிச்சாலே சொக்குது அதென்ன சிரிப்பு .. வாயை கோணிக்கிட்டு
இன்னும் கொஞ்ச நேரம் பேசேன் தூங்க விடு
உன் மடியில படுக்கணும் கொஞ்சம் தள்ளிப்படு
தியேட்டருக்கு வந்தாலும் உன்னையத்தான்  பார்க்கனும்போல இருக்கு சினிமாவப் பார்க்க விடுறியா
நீ விடிய விடிய பேசினாலும் கேட்டுக்கிட்டே இருப்பேன் கொர் ... கொர்...

அழகான பாடல் ஒன்று :




கொசுறு: கல்யாணத்துக்கு அப்புறமும் கல்யாணத்துக்கு முன்னாடி மாதிரியே இருங்க... வாழ்க்கையும் இனிக்கும்.

புத்தகச் சுமை

தனியார் பள்ளிகள், தேவையில்லாத நோட்டுப் புத்தகங்களை மாணவர்கள் கொண்டுவர நிர்பந்தம் செய்யாமல், தேவையானவற்றை மட்டுமே கொண்டு வர, பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உத்தரவிட்டார்.
இளம் வயதிலேயே, அதிகமான புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை சுமப்பதால், மாணவ, மாணவியர், முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.