ஞாயிறு, ஆகஸ்ட் 26

உலக பெண் விஞ்ஞானிகள்

அலையல்ல சுனாமி
           இரா.நடராசன் அவர்கள் எழுதிய உலக பெண் விஞ்ஞானிகள் என்ற நூலில் இதுவரை நாம் கேள்விப்படாத பெண் விஞ்ஞானிகளின் பட்டியலைத் தந்துள்ளார். பெண் விஞ்ஞானிகள் யார்? யார்? எனக்கேட்டால் நிச்சயம் ஒரு சில பெயர்களைத்தவிர யாரையும் நமக்குத்தெரியாது.உலகின் முதல் விஞ்ஞானி ஒரு பெண்ணாகவே நிச்சயம் இருந்திருக்கவேண்டும் என சிந்தனையாளர் லெவிஸ்ட்ராஸ் குறிப்பிட்டுள்ளார். ஆண் விஞ்ஞானிகளின் பெயர்களைத் தெரிந்திருக்கும் அளவுக்கு பெண் விஞ்ஞானிகள் பெயர்களை நாம் தெரிந்திருப்பதில்லை. அதற்கான காரணம் ஆணாதிக்கமா? அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. பெண்களின் சிந்தனைகளை வளரவிடக்கூடாது என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம்.

சனி, ஆகஸ்ட் 25

குழந்தையிடம் கற்றுக்கொள்

அனைத்தும் அறிந்ததாக நினைக்கும் மனிதா
குழந்தையிடம் கற்றுக்கொள்
பழையதை உடனே மறக்க
பொறாமையை பொசுக்க
சிறிய பொருளிடத்திலும் இன்பம் காண
கோபத்திலும் கொஞ்ச!

ஞாயிறு, ஆகஸ்ட் 19

காகித கப்பல்

அலையல்ல சுனாமி

அழகழகான 
கப்பல்  செய்து 
விட்டுகொண்டுதான்
இருந்தேன்
நீயும் ரசிக்கிறாய்
என நினைத்து...
அடிப்பாவி! 
விட்டது கப்பலை அல்ல
என் கவிதையை!
-------------------------------------------------------

வெள்ளி, ஆகஸ்ட் 3

மனிதர்கள் வாலை இழந்த கதை

             உலகம் குழந்தையாக இருந்தபோது எனும் நூலில் இந்தியப் பழங்குடியினரின் பலவகையான பழங்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  இந்த அழகிய நூலைத் தமிழில் பிரிஜிட்டா ஜெயசீலன் எழுதியுள்ளார். சில கதைகள் சுவாரஸ்யமானவை. மலைவாழ் மக்கள் மனிதன் தோன்றியது குறித்துப் பல்வேறு அபிப்பிராயங்கள் கொண்டுள்ளனர். சிலர், கடவுள் தம் கைகளினால் முதல் மனிதனைக் களிமண் கொண்டு உருவாக்கினார் எனக் கூறுகிறார்கள்.

TRB TET PAPER I ANSWER KEY