- புவியின் சுற்றளவு 40,067 கி.மீ
- சூரியன் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 8.3 நிமிடங்கள்
- புவிக்கும் பிராக்சிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் 4.3 ஒளியாண்டு
- சூரியன் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ்
- புவியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை 5000 டிகிரி செல்சியஸ்
- சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை 15,000,000 டிகிரி செல்சியஸ்
- பனிப்பந்து என்றழைக்கப்படுவது புளூட்டோ
- ஆகாய கங்கை எனப்படுவது பால்வெளி அண்டம்
- சனிக்கோளின் துணைக்கோள்கள் எண்ணிக்கை 60
- சந்திரன் பூமிய சுற்றும் சராசரிவேகம் 9,84,401 கி.மீ
வெள்ளி, செப்டம்பர் 28
ஆசிரியர் தகுதித்தேர்வு - புவியியல்
திங்கள், செப்டம்பர் 24
அந்தோ! ஆசிரியர்
”பள்ளிக்கூடம் என்பது நாகரீக உலகின் முன் அறிவிக்கப்படாத கொத்தடிமை முறை; குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் சமூகம் அங்கீகரித்த கொடிய வன்முறை” என்றார் ஜான் ஹோல்ட். 1972 ல் பள்ளி மாணவர் உரிமை கோரும் மாநாட்டில் நான்கு விசயங்களை மாணவர்களுக்கு அளிக்ககோரியது.
1. மாணவர்களை அடிப்பது, தண்டனைகள் உடல் ரீதியில் வழங்குவதை உடனே தடை செய்ய வேண்டும்.
2. உணவு இடைவேளையோடு, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை குறைந்தபட்சம் பதினைந்து நிமிட ஆசுவாசப்படுத்தலை அமல் செய்யவேண்டும்.
3. இடைவேளையின் போது பள்ளியில் எங்கும் சுற்றித்திரியும் சுதந்திரம்.
4. உடனடியாக சீருடை திணிப்பை நிறுத்தி சீருடைகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.
மேலும் அவர் கூறுகையில் “பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரி உட்காரும் கொடுமையிலிருந்தும் கட்டுப்பாட்டு பயங்கரத்திலிருந்தும், ஆசிரியரின் கோலிடமிருந்தும் தப்பி உடனடியாக ஒளிய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்றார்.
பாலீ ஃப்ரையிரே என்ற கல்வியாளர் நடத்திய ஆய்வில் ஆசிரியர் மாணவர் உறவு என்பது....
ஆசிரியர் பாடம் நடத்துபவர் ; மாணவர் நடத்தப்படுபவர்.
ஆசிரியருக்கு எல்லாம் தெரியும்; மாணவருக்கு ஒன்றும் தெரியாது.
ஆசிரியர் பேசுவார்; மாணவர்கள் கவனிப்பார்கள்.
நிகழ்ச்சிப்போக்கை ஆசிரியர் தீர்மானிப்பார்; மாணவர்கள் தங்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.
ஞாயிறு, செப்டம்பர் 16
வெள்ளி, செப்டம்பர் 14
சனி, செப்டம்பர் 8
கழுதையும் குருவியும்
ஆளுக்கொரு உரிமை என நாடுகளுக்கிடையேயும் உலக வர்த்தக அமைப்புடனும் போடப்படும் ஒப்பந்தத்தினை கேலி செய்யும் வகையிலும் அது ஒரு ஏமாற்று வேலை என்பதையும் சொல்லும் விதமாக ஒரு கதை. ”முதலாவது”, “இரண்டாவது” என்று சொல்லப்படுவதன் அர்த்தமின்மையையும் இந்தக் கதையின்மூலம் விளங்கிக் கொள்ளலாம். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் அறிவொளி கற்போர் கூறிய கதையின் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இது ஒரு எளிய கதைதான் என்றாலும் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது.
கழுதையும் குருவியும் நண்பர்களாம். இரண்டும் சேர்ந்து விவசாயம் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டன. ஒப்பந்தத்தில் ஆளுக்கு ஒரு உரிமை தரப்பட்டது.
வெள்ளி, செப்டம்பர் 7
சாக்கடை மணம்
அந்த ஊரில் இது கொஞ்சம் பெரிய பாலம்தான். இரண்டு பகுதிகளையும் இணைக்கும் முக்கியமான பகுதி அது. பாலத்தின் கீழ் ஒரு ஆறு ஓடியதற்கான அடையாளம் இன்னும் மாறவில்லை. இப்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தால் மட்டுமே அதில் நீர் ஓடும். மற்ற நாட்களில் எல்லா ஊரிலும் ஓடிக்கொண்டேயிருக்கும் அதே சாக்கடைதான் இங்கும் ஓடுகிறது.
எல்லா ஊர்களிலும் ஆறு தன் அடையாளத்தினை இழந்து வருகிறது. அது ஓடிய வழித்தடங்களை மனிதன் தனதாக்கிக்கொண்டான். ஆறு தன்னை சுருக்கிக்கொண்டது. தன் உடம்பில் ஓடிய சுத்தமான நீரை அது இழந்து பல காலமாகிவிட்டது. தன் உடம்பையும் வருத்திக்கொண்டு பல குப்பைகளையும், நாற்றமெடுக்கும் நீரையும் மட்டுமே தன்னுள் அடக்கிக்கொண்டுள்ளது. அதிலிருந்து வரும் வாசனையை ஏற்க மனமில்லாமல் மனிதன் மூக்கைப்போத்திக்கொள்கிறான். அத்தனை கழிவுகளும் அவனிடமிருந்துதான் வந்தன என்பதை அறியாமலும் அதனை மனம் ஏற்காமலும் உள்ளான்.
புதன், செப்டம்பர் 5
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)