செவ்வாய், அக்டோபர் 15

நினைவுகள்



நினைவுகளுக்கு
நரை இல்லை போலும்
மீண்டும் மீண்டும்
அப்போது பிறந்த
குழந்தைபோல்
புதிதாகவே இருக்கிறது
உன் நினைவுகள்
என்மீது சிறுசிறு
எறும்புகள் போல
ஊர்ந்துகொண்டிருக்கிறது
எனக்கு தெரியும்...
எப்போதும் என்னை 
நினைவில் வைத்திருப்பாய்
நினைக்கத்தோன்றும்
முகமும் மறக்க
நினைக்கும் முகமும்
ஒன்றாக இருப்பது
காலத்தின் கோலம்தான்
எப்போதாவது
என்னை மறக்க 
நினைத்தால் 
என்னைப்பற்றிய மிச்ச
நினைவுகளை மட்டுமாவது
வைத்துக்கொள்...
நானும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்
நினைவுகள்
வரமா? சாபமா?