புதன், டிசம்பர் 27

கவிதை என்ற பெயரில் கிறுக்கியவை

நைஸ்
அழகு
செம
வாவ்
சூப்பர்
அருமை
ம்ம்ம்...
இரு கொஞ்சம்
வார்த்தைகள் சேகரித்து வருகிறேன்..!

------------------------------------------------------------------------------
இரண்டு சொட்டு
கரெண்ட்
உன் கண்கள்..!

------------------------------------------------------------------------------
அதிகாலை உன்
அழகைப் பார்த்து
சூடாகிக்கிடக்குது மார்கழி!

-----------------------------------------------------------------------------
சென்னை சில்க்ஸ்
போத்தீஸ்
சரவணா ஸ்டோர்
ஜெயச்சந்திரன் சில்க்ஸ்
இன்னும்... 
எத்தனையோ கடைகளின்
தாவணிகள் ஏங்குகின்றன
நீ கட்டுவதற்கு
கடைசியில்
நான் எடுத்து தந்த
தாவணி கட்டிக்கொண்டது
உன்னை..!

--------------------------------------------------------------------------------
உனது வாசித்தலுக்காக
காத்திருக்கும் எனது
கவிதைகள்
நீ வாசித்துப்பார்
உனக்கே தெரியாத
உன்னை அறிமுகம்
செய்திருப்பேன்..!

-----------------------------------------------------------------------------------
உன்னை எப்படித்தான்
பார்க்கனும் கொஞ்சம் சொல்லு
எங்கோ பார்த்து பேசினால்
நேரே பார்த்து பேச
பயமா என்கிறாய்
கண் பார்த்து பேசினால்
ஏன் குறுகுறுனு
பார்க்க என்கிறாய்
கொஞ்சம் பார்வையை
கீழிறக்கினால்
ச்சீய் என்கிறாய்
கொஞ்சம் தலைசாய்த்து
பார்த்தால் முந்தானையை
சரிசெய்கிறாய்
எப்படித்தான் பார்க்கனும்
கொஞ்சம் சொல்லு..!

--------------------------------------------------------------------------------------
மழைக்கவிதை
எழுத நேரமேது
மழையும் அவளும்
உடனிருக்கும்போது..!

--------------------------------------------------------------------------------------
இந்நேரம்
முடிவுசெய்திருப்பாய்
அடிக்கலாமா
உதைக்கலாமா
இல்லை...
அணைக்கலாமா என
எதுவாயினும்
உன் உதட்டால் செய்..!

---------------------------------------------------------------------------------
நீ என்னை
முறைத்துக்கொண்டே
கடக்கும்போது
உன் ஆடை மட்டும்
என்னை உரசிப்போகிறது..!

------------------------------------------------------------------------------------
கவிதைக்கு பொய்யழகு
என் கவிதைக்கு
உன் 'மெய்'தான் அழகு!

--------------------------------------------------------------------------------------
டேய்.. என்னடா
வரவர கலராயிட்டே போற
என்ற உன் கேள்விக்கு
தினமும் கனவில்
உரசுவது உன்னைத்தானே
என்று எப்படி சொல்வேன்..!

--------------------------------------------------------------------------------------
தூக்கிச்சொருகுன வெள்ளச்சேலை
கருத்த உடம்பில்
ஓடும் வியர்வை
ஆளுசர புல்லுக்கட்டை
அசராமா தூக்கிட்டு வரும்
என் அப்பத்தா கால்தடம்
படாத இடமில்லை
இந்த பனங்காட்டில்
பனஒலைகளை பக்குவமாய்
வெட்டி பொங்கல் வைப்ப
பனங்கிழங்கு வேகும் வாசனை
பக்கத்து தெருவுக்கும் மணக்கும்
சாயங்கால வேர்வையை
பனைவிசிறியை வைத்து விரட்டுவ
உன்மடி படுத்து ஓசியில
காத்து வாங்குவேன்
குருத்தோலையில் கொழுக்கட்டை
நீ அவிச்சா நம்ம ஊர்
சாமியும் வீடு தேடி வரும்
பனைமட்டையில் நீ செஞ்ச
வண்டி பஞ்சரில்லாம ஓடும்
நீ உடச்சு கொடுக்கும்
கருப்பட்டியின் தித்திப்பு இன்னும்
என் நாக்கில் நிக்குது
நீ என்னைவிட்டு போன
நாளுல பனங்காட்டுல
ஒத்தையாய் நானழுதேன்
பனமரமும் சேர்ந்தழுதுச்சு
இப்போ பனையுமில்லா
நீ நடந்த பாதையுமில்ல
நீ செஞ்ச பனவிசிறியில
காத்து வாங்கிட்டே
பழங்கதையை நினச்சு பாக்கேன்..!

-----------------------------------------------------------------------------------------