செவ்வாய், ஜனவரி 8

கடைசி பெஞ்ச் மாணவன்

கடவுள் உன்னை 
இலக்கணப்படிதான் படைத்துள்ளார்
இம்புட்டு அழகா!
நீயும் தமிழும் ஒன்றுதான்
மிக இனிமையாக

தயவு செய்து
ஆங்கிலத்தில் பேசாதே
உன் மனதைப்போலவே
எனக்கு எதுவும் புரியவில்லை

உன்னைக் கூட்டவும் முடியாமல்
கழிக்கவும் முடியாமல்
என் காதலில்
பெருத்துக்கொண்டே போகிறேன்
உன்னைப்பார்த்த நாளிலிருந்து
கணக்கில் நான் ஜீரோதான்

இதயத்தின் படம் வரைய
அறிவியல் ஆசிரியர்
கட்டளையிட்டார்
நான் உன்னை வரைந்து
கொண்டிருக்கிறேன்

புவியின் அமைப்பை போல
உன் உடலின் அமைப்பினை
கொஞ்சம் வரைந்து கொடு
இதயம் எங்குள்ளது
என அறிந்து கொள்வேன்

விரைந்து வா!
உன் தந்தை என்மீது
போர் தொடுக்கும்முன்
இருவரும் சேர்ந்து 

 நம் படைகளைப் பெருக்கி
புது வரலாறு படைக்கலாம்!

சனி, டிசம்பர் 22

ஓலைக்குடிசை

இரவு வானின் அழகை
எங்கள் ரசிக்க முடியாத
ஓட்டை குடிசையின் 
வழியே ரசிக்கலாம்
ஒரு மழைக்காலத்தில்
கிழிந்த பாய்
பழைய துணி
நைந்துபோன சாக்கு
இத்துப்போன கிடுகு
வீணாய்போன பாலித்தீன்
இவற்றில் ஏதோ
ஒன்றை வைத்து
தற்காலிகமாய்
மழை நிற்க வைப்போம்
அடுத்த மழைக்குள்
ஓட்டையை சரி செய்யனும்
இயலாமையை வெளிப்படுத்துவார்
தந்தை
எனக்கும்
ஓலையில் செய்த
கால்சட்டை எங்கேனும்
கிடைக்குமா?
இவற்றில் ஏதேனும்
ஒன்றை வைத்து மறைத்து
நானும் மானம் காத்துக்
கொள்வேன்!