வெள்ளி, செப்டம்பர் 30

நீரில் மிதக்கும் ஊசி

நீரில் மிதக்கும் ஊசி
        மாணவர்களுக்குப் பரப்பு இழுவிசையை பற்றிக் கற்று கொடுக்கும் போது இதைச் செய்து காண்பிக்கலாம். ஒரு கண்ணாடி டம்ளரில்  நீரை நிரப்பவும். அதில் மேல்பரப்பில் டிஸ்யூ பேப்பரை கிழித்துவைத்து அதன் மீது ஊசியை வைக்கவும்.

சிறிது நேரத்தில் டம்ளரில் மிதக்கும் டிஸ்யூ பேப்பர் துண்டு தண்ணீரில் நனைந்து மூழ்க ஆரம்பிக்கும் ஆனால், ஊசி மட்டும் தண்ணீர் மேல் பரப்பில் மிதக்கும்.  
என்ன காரணம் : 

             நீரில் மிதக்கும் டிஸ்யூ பேப்பர் தண்ணீரில் நனைவதால் அடர்த்தி அதிகமாகி  நீருக்குள் மூழ்கிவிடும். ஆனால், அதன் மீது வைக்கப்பட்ட ஊசி கைகளிலிருந்த எண்ணெய் பிசுக்கு காரணமாக நீர் இதை நனைப்பதில்லை. நீரின் பரப்பு இழுப்பு விசையின் காரணமாகவும் , ஊசியினால் இடம்பெயர்ந்த நீரின் எடைக்குச் சமமானதொரு சக்தியும் அதன்மீது மேல்நோக்கிய அழுத்தத்தைச் செலுத்துவதாலும் ஊசி நீரில் மூழ்காமல் மிதக்கும். இதை மிகச்சரியாகச் செய்ய ஊசியில் சிறிது மெழுகு அல்லது வாசலின் தடவிக்கொள்ளலாம்.

1 கருத்து:

  1. உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு