செவ்வாய், அக்டோபர் 11

குருட்டுக் கண்கள்

     நமக்கு உள்ள  உறுப்புகளில் கண்கள் முக்கியமான இடத்தைப்    பிடிக்கிறது.  அந்த  கண்களும் எல்லோருக்குமே ஒருநேரத்தில் குருடுதான் என்றால் நம்ப முடிகிறதா?
       நம் கண்ணின் விழித்திரையில்(Retina) கண் நரம்பு(Optic nerve) ஆரம்பிக்கும் இடத்தில் ஒளி உணர்வி செல்கள் (Photoreceptor)  இல்லை. ஒளி உணர்வி செல்கள்தான் பார்வை நரம்பில் படும் பிம்பத்தை மூளை உணர்ந்து கொள்ளச்செய்கிறது. ஒளி உணர்வி செல்கள் இந்த இடத்தில் இல்லாததால் பிம்பத்தை நம் மூளை உணர்ந்து கொள்வதில்லை.எனவே அந்த பிம்பம் நமக்கு தெரிவதில்லை. இது குருட்டுப் புள்ளி (Blind Spot) எனப்படும்.  படத்தைப் பாருங்கள்.. Blind spot சிவப்பு வட்டம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

       மூளையானது இந்தக் குறையை தெரியாமல் சரி செய்து விடுகிறது. மற்றொரு கண்ணும் இதற்கு துணை புரிந்து குறையை தெரியாமல் செய்து விடுகிறது.

குருட்டுப் புள்ளியை (Blind spot) சோதித்தறிய நிறைய சோதனைகள் உள்ளன. 
      அவைகளில் சில...
இடது கண்ணை மூடிக் கொள்ளவும். வலது கண்ணின் மூலம் கீழேயுள்ள படங்களில் இடது பக்கமுள்ள படத்தைப் பார்த்துக் கொண்டே கணிணித் திரையின் முன்பக்கமாக வரவும்.ஒரு குறிப்பிட்ட இடத்தில்(Approximately 25செ.மீ) வலது பக்கமுள்ள படம் மறையும். மீண்டும் முன்பக்கம் நகரும் போது படம் தோன்றும். அந்த படம் மறையும் இடமே Blind spot ஆகும்.





3 கருத்துகள்:

  1. நல்ல பதிவு.
    நீங்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்களைப் பற்றிய குறிப்புகளில் உங்களது மின்னஞ்சல் முகவரியும் சேர்த்து விடுங்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் என்னை சந்திக்கலாம். எனது தொலைபேசி எண்
    94434 27128
    நம்மை சுற்றியுள்ள விஷயங்களே எழுதி மாளாது. நமது ஊர் ஒரு புண்ணிய பூமி. நிறைய எழுதுங்கள்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

    பதிலளிநீக்கு