சனி, அக்டோபர் 15

எனக்கு வாய்த்தவள்!

எனக்கு வாய்த்தவள்!!
காலை எழுந்தவுடன்
காபியும் போடுவாள்!
கொஞ்சம் காலையும் அமுக்குவாள்!

 பக்குவமாய் வெந்நீரும் வைப்பாள்
பார்த்து பார்த்து பராமரிப்பாள்!

சமையலும் செய்வாள்
அதைச் சந்தோஷமாய் சாப்பிடவும் வைப்பாள்!

உன் உடையை விட 
என் உடையில் உன் அழகு பார்ப்பாய்!

அவள் அலுவல்களுக்கிடையே 
எனக்கு அலுவலகம் செல்ல உதவியும் செய்வாள்!

மாமியார் சண்டையிடுகையில்
மறுமொழி கூறாமல் 
பக்குவமாய் எடுத்துரைப்பாள்!

மாலையில் அலுத்து வரும்போது
கொஞ்சம் ஆறுதலாய் இருப்பாள்!

இத்தனை நேரமும் தாயாய் 
இரவில் இருப்பாள் மனைவியாய்!

உனக்கு ஒரு நோவு என்றாலும்
என்னைக் கவனிப்பதிலேயே
நோக்கம் கொள்வாய்!

நீதான் என் அடுத்த ஜென்மத்திலும் மனைவியாய்...
வேண்டாம்...வேண்டாம்...

கடவுளிடம் வேண்டுவோம்...
இந்த ஜென்மத்திலேயே
வாழ்ந்து முடிப்போம்
சந்தோசமாய் வாழ்க்கையை!

அடுத்த ஜென்மம் என்றொன்று உண்டோ? இல்லையோ?

6 கருத்துகள்:

  1. அருமையான நிறைவான கவிதைக்குப் பாராட்டுக்கள்>

    பதிலளிநீக்கு
  2. //கடவுளிடம் வேண்டுவோம்...
    இந்த ஜென்மத்திலேயே
    வாழ்ந்து முடிப்போம்
    சந்தோசமாய் வாழ்க்கையை!//

    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  3. அருமையான வரிகள்.குடும்பத்தலவனின் நிறவான மனதினை அழகுர படம் பிடித்து காட்டுகின்றன கவிதை வரிகள்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா30 அக்டோபர், 2011

    ''..அடுத்த ஜென்மம் என்றொன்று உண்டோ? இல்லையோ?...''
    அருமையான பதிவு சகோதரா. இன்று தான் வந்தேன் வலைக்கு வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com
    ...

    பதிலளிநீக்கு