திங்கள், அக்டோபர் 3

பாத்திரங்களின் அளவுகள்

          நாம் அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரங்களின் அளவுகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.சில நேரம் சமையல் குறிப்பு பார்த்து சமையல் செய்யும் போது 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் உபயோகிக்கவும் என்றிருக்கும்... ஆனால் அது எவ்வளவு எனத் தெரியாது. 
பொதுவாக உணவுப் பண்டங்களை அளப்பதற்கு  அன்றாடம் வீட்டில்  உபயோகிக்கும் பாத்திரங்களின் அளவுகளை அறிந்து கொள்வோம்.
1 டம்ளர்                                -   200 மி.லி
1 கண்ணாடி கிளாஸ்      -   250 மி.லி
1 டீ கப்                                   -   125 மி.லி
1 கிண்ணம்                          -   200 மி.லி
1 சிறிய கிண்ணம்             -   150 மி.லி
(7.8 செ.மீ விட்டம்)
1 மேஜைக் கரண்டி           -     15 மி.லி
1 தேக்கரண்டி                      -       5 மி.லி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக