ஞாயிறு, மார்ச் 25

திமு...திபி

அலையல்ல சுனாமி

"நான் உனக்கு காதலியானபோது
நீ எனக்கு ஒரு கவிஞனானாய்"
என் உடல் அசைவுகளை வர்ணிப்பாய்
என் ஒவ்வொரு சொல்லிலும்
உன் அழகு பார்ப்பாய்
என் காது வளையத்தைக்கூட
வர்ணிப்பாய்

நான் உன்னைவிட்டுப் பிரியும் 
ஒவ்வொரு நொடியும்  உலகம் 
வேகமானது என்பாய்
நீ காத்திருக்கும் ஒவ்வொரு நிமிஷமும்
நரகம் என்பாய்
நான் பேசினால் தேனைவிட 
இனியது என்பாய்
என் பேச்சினைக் கேட்டுக் கொண்டே
நாள்முழுவதும் இருப்பாய்
எனக்காக நீ காத்திருக்கும் நேரத்தில்
கடல் மணல் முழுவதும் 
எண்ணிவிட்டேன் என்பாய்
என்னைத் தேவதை என்பாய்
என் உலகமே நீதான் என்பாய்

கடந்த ஒரு வருடத்தில் 
என்னைச் சனியன் என்கிறாய்
பிசாசு என்கிறாய்
என்னைப் பார்த்தாலே பத்திக்கிட்டு
எரியுது என்கிறாய்
நான் பேசினால் நீ காது
பொத்திக் கொள்கிறாய்
என் காதுவளையம் உனக்கு
கைவிலங்காகி விட்டது என்கிறாய்
நான் உன்னைவிட்டுப் பிரிந்தால்
போதுமென்கிறாய்
கடல் மணலையும் எண்ணும் உன்
பொறுமை இழந்தாய்
"நான் உனக்கு மனைவியானபோது
நீ எனக்கு ஒரு கிறுக்கனானாய்"


17 கருத்துகள்:

  1. "நான் உனக்கு மனைவியானபோது
    நீ எனக்கு ஒரு கிறுக்கனானாய்"

    மாற்றம் ஒன்றே மாறாதது..

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா25 மார்ச், 2012

    avvvvvvvvvvvvvv....சுப்பரா சொன்னீங்க அண்ணா ...அப்புடித்தான் வாழ்க்கை இருக்கும் போல

    பதிலளிநீக்கு
  3. ஆசையையும் ,மோகத்தையும் 30க்குள்ளும் 60வதுக்குள்ளுமாய் அடக்கி விட்ட பிற்போக்குத்தனம் நிறைந்த சொற்கட்டுகளை கீறி வெளியே வருகிற போது இது மாதியெல்லாம் சலிப்பு ஏற்படாது.
    காது வளையும் கை விலங்காய் தெரியாது.
    திமு-திபிகளை ஒன்றும் செய்ய முடியாது.
    நன்றி வணக்கம்

    பதிலளிநீக்கு
  4. கச்சிறுக்கும் போது கரும்பானவள்
    கைக்குழந்தை வெச்சிருக்கும் போது
    வேம்பானாளோ!

    அருமையான படைப்பு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. வாசிக்க வாசிக்கச் சிரிச்சிட்டேன் விச்சு.இண்ணைக்கு ஞாயித்துக்கிழமை.வீட்டனுபவத்தை அப்பிடியே கோபம் தீர எழுத்தில கொட்டிட்டீங்கபோல.வாழ்வின் இயல்பு இதுதான்.வீட்டுக்கு வீடு வாசல்படி !

    பதிலளிநீக்கு
  6. அனுபவம் பேசுகிறதோ ? பல பேரின் உண்மை நிலைதான் .

    பதிலளிநீக்கு
  7. திருமணத்துக்கு முன்னரான எதிர்பார்ப்புகள் திருமணத்தின் பின்னர் ஏய்ப்புகளாகிவிடுகின்றனவே. அதன் பாதிப்பு இருதரப்பிலும் இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த ஒரு தரப்பைப் பாடும் கவிதையில் வலியும் அதிகம்.

    பதிலளிநீக்கு
  8. என்ன சார் ! நொந்த..... சாரி..... சொந்த அனுபவமா ?

    பதிலளிநீக்கு
  9. கவிதையில் வலி அதிகமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா27 மார்ச், 2012

    சொந்த அனுபவம்?

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா31 மார்ச், 2012

    பலர் அனுபவம். ம்..ம்...நன்றாக உள்ளது....
    வேதா.இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  12. #"நான் உனக்கு மனைவியானபோது
    நீ எனக்கு ஒரு கிறுக்கனானாய்"# அருமையான வரிகள் , வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  13. துரைசாமி04 ஏப்ரல், 2012

    விச்சு சார்,
    உங்கள் கவிதையை படிக்கும் போது எங்கள் வீட்டில் நடப்பது இவருக்கு எப்படி தெரிந்தது என்று யோசித்தேன்.வீட்டுக்கு வீடு வாசப்படி. காதலியின் காலை தடுக்கிய சனியன் கல் 5 ஆண்டுகள் கழித்து சனியன் பொண்டாட்டியின் காலை தடுக்கிய கல் ஆகவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுக்குவீடு வாசல்படி..தங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. பாலை ஊற்றியது என்னவோ உண்மைதான் பாத்திரத்தில் உப்பிருந்தால் திரிந்து தான் போகும்.

    பதிலளிநீக்கு