சனி, ஜூன் 16

மானுட உடம்பின் மகத்துவம்


”உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்

உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"     

                            -   திருமூலரின் திருமந்திரம்
அலையல்ல சுனாமி
கட்டுரைக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை என புலம்பக்கூடாது...

  • ஒரு நாளில் சராசரியாக 21,600 முறை சுவாசிக்கிறோமாம். 
  • நமது கட்டை விரலின் அளவும் மூக்கின் அளவும் ஒன்றுபோல் இருக்குமாம். 
  • பெண்ணின் அண்டம்தான் மனித உடலில் மிகப்பெரிய செல்லாகும்.
  • இடதுபக்க சுவாசப்பை இருதயத்திற்கு இடம் ஒதுக்கி கொடுப்பதனால் சிறியதாக இருக்கும். 
  • மிகவும் சக்தி வாய்ந்த தசை நமது நாக்குதானாம் (எப்படி வேண்டுமென்றாலும் பேசும்). 
  • ஆண்களைவிட பெண்கள் வேகமாக கண்சிமிட்டுவார்களாம் (அது உண்மைதான்). கண் இமைகளின் விளிம்பில் 20 - 30 சுரப்பிகள் இருக்கின்றன. கண் சிமிட்டும்போதெல்லாம் கண்விழியை இவற்றின்மூலம் அலம்புகின்றன. 
  • மிகப்பெரிய உடல் உறுப்பு தோலாகும், அதன் பரப்பளவு கிட்டத்தட்ட 20 சதுர அடியாகும். 
  • மிகப்பலமான பகுதி பல்லின் எனாமல்தான்.
  • தோள்மூட்டு ஒன்றே மனித உடலில் 360 பாகை வரை சுழலக்கூடியதாம் (பொண்ணுங்க வந்துட்டா கண்ணும் சுழலுது). 
  • கண்களைத் திறந்து கொண்டே தும்ம முடியாதாம். 
  • எலும்பிலும் பற்களிலும் அதிகமான (99%) கால்சியம் உள்ளது.
  • சராசரியாக ஆண்களைவிட பெண்கள் உயரம் குறைவு (இதுலையாவது குறைவா இருக்காங்களே). 
  • இருபது வயதான ஆணின் மூளையிலுள்ள மயலின் நரம்பிழைகளின் நீளம் சுமார் 1,76,000 கி.மீ. 
  • ஒவ்வொரு வினாடியும் 80 லட்சம் சிவப்பு ரத்த அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன.
  • முதுகெலும்பு கோவை இயக்கம் 400 தசைகளாலும் 1000 தசை நார்களாலும் ஒருங்கிணைக்கப்படுகிறது.  
  • கருப்பையில் தாயுடன் ஒட்டியிருந்தோம் என்பதை நினைவூட்டுவதைத்தவிர தொப்புளுக்கு வேறு பயனில்லையாம் (கதாநாயகியின் தொப்புள் பம்பரம்விடவும் பயன்படுகிறது). 
  • மனித உடம்பு படம் வரையவும் பயன்படும்... 

alaiyallasunami

alaiyallasunami
போட்டிகள் ஆரம்பம்...


கண்ணதாசன் சொன்னதுபோல 

     “பார்த்தா பசுமரம், படுத்துவிட்டா நெடுமரம், சேர்த்தா 
       விறகுக்காகுமா,தீயிலிட்டால் கரியுமிஞ்சுமா” என்பது போல உயிர் இருக்கும்வரைதான் எல்லாமும்.

30 கருத்துகள்:

  1. அறியாதன பல அறிந்துகொண்டோம்
    அனைவருக்கும் பயனுள்ள அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அணைத்து கருத்துக்களுமே அருமை புதுமை. தகவல்களுக்கு நன்றிகள்


    படித்துப் பாருங்கள்

    ஹாய் கங்ராட்ஸ்

    பதிலளிநீக்கு
  3. நிறைய
    நல்ல தகவல்கள்
    இடையே சில நக்கல்களும்
    அழகிய தத்துவங்களும்

    அருமையான பதிவு சார்

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா16 ஜூன், 2012

    அப்பப்பா! ஒரே இடத்தில் இத்தனை தகவலும் அருமை. நல்ல தகவல் மிக்க நன்றி .ஊடே ஊடே தங்கள் நளினக் கிண்டலும் சுவை கூட்டுகிறது. நல் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல தகவல் விச்சு சார், சில படங்களை தவிர்த்திருக்கலாம்.!

    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே., உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே..; படிச்சதுல இவ்வுளோ தான் ஞாபகம் இருக்கு திருமூலர் திருமந்திரம்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல உபயோகமான தகவல்/நல்ல பதிவு.வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  7. அறியாத பல தகவல்கள் சார் ! நன்றி !

    பதிலளிநீக்கு
  8. அருமை அருமை
    தேவையான தகவல்கள் நண்பா..

    பதிலளிநீக்கு
  9. மிகவும் சக்தி வாய்ந்த தசை நமது நாக்குதானாம் (எப்படி வேண்டுமென்றாலும் பேசும்). ///
    சராசரியாக ஆண்களைவிட பெண்கள் உயரம் குறைவு (இதுலையாவது குறைவா இருக்காங்களே). ////
    அண்ணா என்ன கலாய்ப்பது போல் இருக்கு!

    அழகிய தொகுப்பு அண்ணா! அறியாத பல விஷயங்கள்! புதுசா இருக்கு!

    பதிலளிநீக்கு
  10. உபயோகமான பதிவு விச்சு ...உங்களின் சாகித்திய அகாடமி விருதுகள் பட்டியல் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது ...தொடரட்டும் உங்கள் பணி ..

    பதிலளிநீக்கு
  11. ஹாஅ..ஹா..ஹா.. வந்தேன்ன்.. படிச்சு படிச்சு சிரிக்க வைக்கிறார் விவிவிச்சூஊஊஉ:))

    //
    ஒரு நாளில் சராசரியாக 21,600 முறை சுவாசிக்கிறோமாம். //

    இல்ல சில நேரம் பயத்தில சுவாசிக்காமலௌம் இருப்பதுண்டெல்லோ?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களைப் பார்த்தாதான் பயமே... அப்பப்பா மூச்சே நின்னுடுது...

      நீக்கு
    2. விச்சூ ...சூசூன்னு விரட்டக்கூடாது.ம்ம்ம்ம்....

      நீக்கு
    3. ஹா..ஹா..ஹா... சிரிச்சதில வயிறே கொழுவப்பார்க்குது:)))

      நீக்கு
  12. இடதுபக்க சுவாசப்பை இருதயத்திற்கு இடம் ஒதுக்கி கொடுப்பதனால் சிறியதாக இருக்கும்.

    ///
    உப்பூடி எல்லாம் இடம் ஒதுக்கிக் கொடுத்துமோ, சிலருக்கு இதயம் குட்டியாக இருக்காம்ம்:)) ஹையோ நான் என்னைச் சொல்லேல்லை:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலபேருக்காக இதயத்தையே கொடுக்கலாம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

      நீக்கு
  13. மிகவும் சக்தி வாய்ந்த தசை நமது நாக்குதானாம் (எப்படி வேண்டுமென்றாலும் பேசும்)


    ////

    ஹா..ஹா..ஹா...:)))

    பதிலளிநீக்கு
  14. ஆண்களைவிட பெண்கள் வேகமாக கண்சிமிட்டுவார்களாம் (அது உண்மைதான்). ////

    எல்லாத்திலயும் வேகம்தானாம்:)) நான் பெண்களாஇச் சொன்னேனாக்கும்:)

    பதிலளிநீக்கு
  15. தோள்மூட்டு ஒன்றே மனித உடலில் 360 பாகை வரை சுழலக்கூடியதாம் (பொண்ணுங்க வந்துட்டா கண்ணும் சுழலுது).

    ///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னாது 80 வயதுப் பெண் வந்தாலும் கண் சுழலுமோ?:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 80 வயதுப் பெண்ணுக்கும் சுழலும்.. மரண பயத்துல...

      நீக்கு
  16. சராசரியாக ஆண்களைவிட பெண்கள் உயரம் குறைவு (இதுலையாவது குறைவா இருக்காங்களே).

    //

    ஜப்பான், சைனீஷ் ஆண்களை இதில சேர்க்கலைத்தானே.. இல்ல சேர்த்தால் இதிலயும் அடிச்சிடுவோம் .. நான் சிக்‌ஷரைச் சொன்னேன்...:)

    பதிலளிநீக்கு
  17. கருப்பையில் தாயுடன் ஒட்டியிருந்தோம் என்பதை நினைவூட்டுவதைத்தவிர தொப்புளுக்கு வேறு பயனில்லையாம் (கதாநாயகியின் தொப்புள் பம்பரம்விடவும் பயன்படுகிறது)

    ///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பூடியெல்லாம் சிந்திக்கிறார்ர்ர்:)))

    பதிலளிநீக்கு
  18. கண்ணதாசன் சொன்னதுபோல

    “பார்த்தா பசுமரம், படுத்துவிட்டா நெடுமரம், சேர்த்தா
    விறகுக்காகுமா,தீயிலிட்டால் கரியுமிஞ்சுமா” என்பது போல உயிர் இருக்கும்வரைதான் எல்லாமும்.


    ///
    உஸ்ஸ்ஸ் யப்பாஆஆஆஆ கடசில கண்ணதாசனைச் சொல்லி, என்னைக் கவுத்திட்டீங்க... அதனால இத்தோடு என் உரையை முடிச்சிட்டுப் போகலாம் என மாத்தி யோசிச்சிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்.. சீ யா மீ யா:))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க நயாகரா போயாச்சா...

      நீக்கு
    2. நோ..நோ.. தேம்ஸ் இருக்க நயகரா எதுக்கு:).. எங்களுக்கு எப்பவும் “முற்றத்து மல்லிகை தான் வாசமாக்கும்”... எப்பூடி? எப்பூடி?:).

      நீக்கு
    3. முற்றம் எப்பவுமே சுகமான ஒன்றுதான். அதுவும் மல்லிகை வாசனையோட இன்னும் சுகம்தான். ஆமா! மல்லிகை வாசம் எப்படி? கூந்தலில் இருந்தா?தோட்டத்திலிருந்தா?

      நீக்கு