வியாழன், ஜூலை 12

திரிபுக்காட்சி



முகத்தில் தண்ணீர் பட்டது
என்னவனாகத்தான்
இருக்கவேண்டும்
காலையில் அவன்
என்னை எழுப்பும்
ஸ்டைலே அதுதான்!

”படா”ரென்று நான் பயந்து
எழுவதில்தான்
அவனுக்கு எத்தனை
சந்தோசம்
அவனுக்கு நான் எப்போதும்
எதுக்கும் பயந்து
கொண்டுதான் இருக்கவேண்டும்!


டீ  தயாரித்து
கொடுத்தேன்
குடித்துவிட்டு சொன்னான்
இந்த டீத்தூள் 
டேஸ்ட்தான் என்று!


காலை சமையல்
வழக்கம்போல்
பொங்கல்தான் வைத்தேன்
கூடவே பாசிப்பருப்பு
சாம்பாரும் வெள்ளை
தேங்காய் சட்னியும்
சாப்பிட்டுவிட்டுச் சொன்னான்
நான் வாங்கிய 
இந்த அரிசி சாப்பிட 
நல்லாதான் இருக்கு!


நான் தேர்ந்தெடுத்து கொடுத்த
அழகான வெளிர் 
நீலநிறச்சட்டையும்
அடர்கருப்பு ’பேண்ட்’டும்
அணிந்துகொண்டே சொன்னான்
அந்த கடையில் எடுக்கும்
ஆடைகள் நன்றாகத்தான் 
இருக்கும்  என்று!


என் ஆசைமகள் சொன்னாள்
அப்பா ஸ்கூலில் வைத்த 
போட்டியில் இன்னைக்கு 
நான்தான் பர்ஸ்ட்
அலுக்காமல் சொன்னான்
நீதான் என் மகளாச்சே என்று!


அத்தனையிலும் என்பங்கும்
உண்டென்று அவன் மனம்
ஒத்துக்கொள்வதேயில்லை...
அவனுக்கும் தெரியும்
நானில்லாமல் அவன் 
இல்லையென்று...
இருந்தும்
அவனுக்கு நான் 
எப்போதும் எதுக்கும் பயந்து 
கொண்டுதான் இருக்கவேண்டும்!







14 கருத்துகள்:

  1. நல்லாயிருக்கு சார்.

    //அத்தனையிலும் என்பங்கும்
    உண்டென்று அவன் மனம்
    ஒத்துக்கொள்வதேயில்லை...
    அவனுக்கும் தெரியும்
    நானில்லாமல் அவன்
    இல்லையென்று...//

    ;)))))

    பதிலளிநீக்கு
  2. ம்ம்....விச்சு ஆண்மனதில் இருந்துகொண்டு உண்மை சொன்னதுக்கு முதல்ல சந்தோஷம்.இன்னும் மாறவேயில்லை நம் சமூகம் !

    பதிலளிநீக்கு
  3. பெரும்பாலன ஆண்களின் மன நிலையையும்
    அதனை பெருந்தன்மையுடன் சகித்துக் கொள்ளும்
    பெண்களிம் மன நிலையையும் சொல்லிப் போன விதம்
    அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.பெண்ணின் பங்கை ஒத்துக்கொள்ளாத ஆணின் மனது.காலையின் சுழியிடலிருந்து இரவு படுக்கை படுக்கைக்கு செல்கிற வரை அவர்களது பங்கு மகத்தானது.இன்னும் சொல்லப்போனால் அவர்களன்றி வாழ்க்கை இல்லை ஒரு ஆணிற்கு/

    பதிலளிநீக்கு
  5. மிக நல்லதொரு கவிதை! அருமையாக இருந்தது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா12 ஜூலை, 2012

    ''...அத்தனையிலும் என்பங்கும்
    உண்டென்று அவன் மனம்
    ஒத்துக்கொள்வதேயில்லை...
    அவனுக்கும் தெரியும்
    நானில்லாமல் அவன்
    இல்லையென்று...
    இருந்தும்
    அவனுக்கு நான்
    எப்போதும் எதுக்கும் பயந்து
    கொண்டுதான் இருக்கவேண்டும்!...''
    பாதிக்கு மேல ஆண்கள் இப்படித்தானே!...என்று தான் மாறுமோ!....மாறவேணும்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  7. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வரவர விசு எங்கேயோஓஓஓஓஒ போய்க்கொண்டிருக்கிறீங்க.

    வெட்ட வெளியில் படுத்திருந்து யோசிச்சூஊஊஉ எழுதிய கவிதையோ?
    கலக்கலோஓஓஓஓஓஓ கலக்கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்டவெளியிலும்.. வெட்டாத வெளியிலும்!! யோசித்து மூளையைக் கசக்கி(அப்படி ஒன்னு இருக்கா?) எழுதியது.

      நீக்கு
  8. அவனுக்கு நான்
    எப்போதும் எதுக்கும் பயந்து
    கொண்டுதான் இருக்கவேண்டும்!///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதில் பயப்பட என்ன இருக்கு. உடனே அடிச்சுச் சொல்ல வேண்டியதுதானே... அது கடையின் மகிமை அல்ல, என் அயனின் மகிமையால்தான் இவ்ளோ அழகா இருக்கிறீங்க என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    பதிலளிநீக்கு
  9. சாப்பிட்டுவிட்டுச் சொன்னான்
    நான் வாங்கிய
    இந்த அரிசி சாப்பிட
    நல்லாதான் இருக்கு!

    ///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னங்க உங்களுக்கு கண்ணில ஏதும் கோளாறோ?:) இது அரிசி இல்லை நான் செய்த பொங்கல்.. அதனால்தான் நல்லாயிருக்கு:)) வேணுமெண்டால் கொஞ்சம் அரிசி தரட்டோ ரேஸ்ட் பாருங்கோ:)))... இப்பூடி வெருட்டிடோணும் உடனேயே:)) பயப்பூடக்கூடா சொல்லிட்டேன்:)).

    பதிலளிநீக்கு