ஞாயிறு, ஆகஸ்ட் 10

கொட்டாவி, ஏப்பம், தும்மல், விக்கல், பொறை, இருமல்

              மனிதனுக்கு ஏற்படும் கொட்டாவி, ஏப்பம், தும்மல், விக்கல், பொறை மற்றும் இருமல் இவை எல்லாமே நம் உடற்செயல் நிகழ்ச்சிகள் சரிவர நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்ற உடற்செயலியல் பிரதிபலிப்புகள்தான்.
கொட்டாவி : 
ஆவ்வ்வ்வ்வ்..... நமக்கு களைப்பு ஏற்படும்போதும், மூளை சோர்வடையும் போதும் நமக்கு அறிவிக்கும் செயல் கொட்டாவி ஆகும். கோடைகாலத்தைவிட குளிர்காலத்தில் மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகின்றனர். ரத்தத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும்போதும் கொட்டாவி வரலாம். நாம் உள்ளிழுக்கும் காற்று ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்க துணை புரியலாம் என்கிறது ஒரு ஆய்வு. கொட்டாவி விடுபவர்களைப் பார்த்தாலே கொட்டாவி வரலாம். இம்புட்டு ஏன்.. கொட்டாவின்னு டைப் பண்ணும்போதே ஆவ்வ்வ்வ்வ்... எனக்கு கொட்டாவி வருகிறது. கொட்டாவி ஒரு தொற்றுச்செயல்.



ஏப்பம் :
நாம் உண்ட உணவில் அதிகப்ப்டியான புரதப்பொருட்கள் இருந்தாலும், புளிப்பு பொருட்கள் இருந்தாலும் இவற்றை சிதைக்கும்பொழுது ஏற்படும் வாயுவை வெளியேற்றும் ஒரு செயல்.குறிப்பாக உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். 

தும்மல் :
ஹச்ச்ச்ச்ச்ச்..... மணிக்கு 140 கி.மீ. நாம் போடும் தும்மலின் வேகம். இது ஒரு அனிச்சை செயல் ஆகும். நம் மூச்சுக்குழலில் ஏதேனும் பொருள் அல்லது உறுத்தல் ஏற்பட்டால் அங்குள்ள கோழைப்படலம் அந்நிய பொருளின் மீது கோழையை சுரந்து அதிவேகத்தில் வெளியேற்றும். 3 நொடிக்குள் சுமார் 5000 பாக்டீரியாக்கள் வெளீயேறுமாம். பனிக்காலத்தில் தும்மல் அதிகமாக வரும். பனியில் கிருமி தொற்று ஏற்பட்டவுடன் அது நுரையீரலில் நுழையாமல் தடுக்க மார்பு, தொண்டைப்பகுதிகளை சுருங்கச்செய்து மூளை பிறப்பிக்கும் உத்தரவே தும்மல்.

விக்கல் :

உதரவிதானம் சரிவர சுருங்கி விரிய முடியாதபோது ஏற்படும் சுவாசச்சிக்கல் விக்கல்.உடலில் அபாயமான நோயின் அறிகுறியாகவும் இந்தத் தொடர் விக்கல் இருக்கலாம். காசநோய், புற்றுநோய் ஆகியவற்றால் நுரையீரலின் வேர்ப்பகுதியில் நெறிகட்டியோ, நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலோ, மார்பு வழியாக உதரவிதானம் செல்லும் பெரினிக் நரம்பு பாதிக்கப்பட்டிருந்தாலோ விக்கல் வர வாய்ப்புள்ளது. மனரீதியான பிரச்னை அல்லது உணர்வுகள் காரணமாக தொடர்ந்து விக்கல் ஏற்படலாம். இந்த வகை விக்கல் விழித்திருக்கும்போது மட்டும் வரும்.

பொறை :
சாப்பிடும்போது உணவுப்பாதையில் செல்ல வேண்டிய உணவுப்பருக்கைகள் சுவாசப்பாதையில் நுழைந்து பாதை மாறியதால் ஏற்படும் விளைவு.

இருமல்:

நுரையீரல், காற்றுக்குழாய், தொண்டை ஆகியவற்றில் சளியை அல்லது உறுத்தும் பொருட்களை அகற்ற ஏற்படும் நிகழ்வு. இது ஒரு அனிச்சை செயல். இது மூன்று நிலைகளில் நடைபெறும். முதல் நிலையில் காற்று நுரையீரலுக்குள் இழுக்கப்படும். பின்பு காற்று வேகமாக வெளித்தள்ளப்படும். மூசுக்குழலின் முகப்பு மூடியிருப்பதால் அழௌத்தம் அதிகமான இடத்திலிருந்து அழுத்தம் குறைவான பகுதிக்கு காற்று வெளியேறும். இது கோழையையும் சேர்த்து வெளியேற்றும்.

4 கருத்துகள்: