சனி, ஜனவரி 28

அறிவியல் ஆனந்தம் 3

அறிவியல் ஆனந்தம் பகுதியில் சில சுவாரஸ்யமான துணுக்குகள்.

கண்ணீர் புகை குண்டில் புரோமைடு கூட்டுபொருள்கள் உள்ளன. இதிலிருந்து வரும் புகை இருமல், கண்ணீரை ஏற்படுத்தும். சில நேரம் கொப்புளங்கள், நரம்புத்தளர்ச்சியையும் ஏற்படுத்தும். வெங்காயைச் சாற்றைக் கண்ணில் பிழிந்து தப்பிப்பவர்களும் உண்டு.

வியாழன், ஜனவரி 26

மரங்கள்

இரும்பு மரங்கள்
இரும்பு மரங்கள்


இலையில்லை
கிளையில்லை
காயுமில்லை
கனியுமில்லை
ஊரெல்லாம்
தண்டு மட்டும் நிமிர்ந்து
இரும்பு மரங்களாய்
செல்போன் டவர்கள்!!

ஞாயிறு, ஜனவரி 22

உதிர்ந்த சிறகுகள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை

              சுவர் ஓரத்தில் பழமையான மரநாற்காலி சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதனருகே நிறைய நெல்லுடன் ஒரு நாளி இருந்தது. அதன் மேலே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் வெளியே சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. அதன்கீழ் ஐந்தாறு பிளாஸ்டிக் சேரும், ஒரு நீளமான மரப்பெஞ்சும் போடப்பட்டிருந்தது. கவலையான முகத்துடன் சில பெருசுகள் அதில் அமர்ந்திருந்தனர். சிலபேர் உட்கார இடமில்லாமல் பக்கத்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தனர். வெளியூரிலிருந்து வந்த சொந்தங்கள் ஊருக்குப் போகும் அவசரத்தில் இருந்தனர்.

புதன், ஜனவரி 18

கனவிலும் நீ

காலைவேளை...
காலை அமுக்கியது போதும்...
போதும் செல்லம்.
சிணுங்கலாக நான்...

செவ்வாய், ஜனவரி 17

அறிவியல் ஆனந்தம் II...பெட்ரோல்,டீசல்...

 டீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் மாற்றினால் என்னவாகும்?
               பெட்ரோல் எளிதில் ஆவியாகக்கூடிய குறைந்த வெப்பநிலையில் தீப்பற்றிக்  கொள்ளும்  எரிபொருள் ஆகும்.  பெட்ரோல்  எஞ்சினில் கார்புரோட்டல்  மூலம்  ஆவியாக்கப்பட்ட  பெட்ரோல்  ஆவியும்  காற்றுக் கலவையும் உள்ளிழுக்கப்படுகின்றன. இங்கு அவை 6  முதல் 8  மடங்கு அழுத்தப்பட்டு ஒரு மின்பொறியால் எரிக்கப்படுகிறது. இதனால்  விசை உண்டாகிறது.

சனி, ஜனவரி 14

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இந்நன்னாளில் அனைத்து நண்பர்களுக்கும்  அவர்களின் குடும்பத்தாருக்கும் சிறப்பும் , மேன்மையும், மகிழ்ச்சியும் வந்துசேர எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அப்போ ஒரு சொல்...இப்போ ஒரு சொல்

         கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன் என்ற நூலில் இருந்து வேற்றுமொழி என்னும் தலைப்பில் ( தமிழில் சுரா).. . சோதிடரின் முகமூடியை கிழிக்கும் அதேவேளையில் ஒரு குழந்தையின் மனநிலையை, எதுவாக ஆக வேண்டும் என்ற நிலையை குழந்தையின் எண்ணமாக அவர் சொல்லும் விதம் வியக்கவைக்கும். நான் படித்து ரசித்த விசயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

சேமியா,மைதா,சவ்வரிசி எதிலிருந்து?

       சில பொதுவான விசயங்கள் நமக்குத் தெரியாமலோ அல்லது மறந்துபோயோ இருக்கலாம். அதில் சில விசயங்களின் ஞாபகமூட்டல் இப்பதிவு. 

சேமியாவானது மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கேழ்வரகிலிருந்தும் சேமியா தயாரிக்கப்படுகிறது. 

நரி

          நம் மனதைப்பற்றிய கலீல் ஜிப்ரானின்   நரி என்றொரு கதையில்... காலையில் தன்னுடைய நிழல் நீண்டு இருப்பதைப் பார்த்து நரி சொன்னது :   "எனக்கு  இன்று  காலை  உணவுக்கு  ஒரு  யானை  கிடைக்க வேண்டும்.' 
         யானையைத்தேடி  மதியம்  வரை அ து அலைந்து  திரிந்தது. ஆனால், மதியம்  தன்  நிழலைப்பார்த்து  நரி  சொன்னது : " எனக்கு ஒரு  எலி  கிடைத்தால் கூட போதும்!'.
      நம்முடைய  மனமும்  இப்படித்தான்.  நமது பலமும்,  பலவீனமும்  ஒரே சமயத்தில்  மனதில்  இடம்பெற  முடியாது. ஒவ்வொரு   சமயத்திலும் ஒவ்வொரு  விதமாக  அவை  வெளிப்படுகிறது.

சனி, ஜனவரி 7

தாவரவியல் - பொது வினா விடைகள்


        அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் தாவரவியல் பாடத்தில் அடிக்கடி கேட்கப்படும் வினாவிடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தவகை வினாவிடைகள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு உதவும். முந்தைய வினாக்களைக் காண இங்கே செல்லவும்.