செவ்வாய், அக்டோபர் 15

நினைவுகள்



நினைவுகளுக்கு
நரை இல்லை போலும்
மீண்டும் மீண்டும்
அப்போது பிறந்த
குழந்தைபோல்
புதிதாகவே இருக்கிறது
உன் நினைவுகள்
என்மீது சிறுசிறு
எறும்புகள் போல
ஊர்ந்துகொண்டிருக்கிறது
எனக்கு தெரியும்...
எப்போதும் என்னை 
நினைவில் வைத்திருப்பாய்
நினைக்கத்தோன்றும்
முகமும் மறக்க
நினைக்கும் முகமும்
ஒன்றாக இருப்பது
காலத்தின் கோலம்தான்
எப்போதாவது
என்னை மறக்க 
நினைத்தால் 
என்னைப்பற்றிய மிச்ச
நினைவுகளை மட்டுமாவது
வைத்துக்கொள்...
நானும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்
நினைவுகள்
வரமா? சாபமா?


சனி, ஆகஸ்ட் 31

மனசை அரித்தவள்

மனசு

ஒளிவெள்ளத்தில்
நிழல் வராது
இருப்பினும்
வருகின்ற திசையினை
நோக்கி தேடுகிறேன்
நேரம் செல்லச் செல்ல
இருட்டத்தொடங்கியது
அறிவு உரைத்தது
இருட்டிலும் நிழல்
வராது என்று..!

மனசு எதையாவது தேடிக்கொண்டே இருக்கிறது. தேடல் நல்லதுதான். அலைபாயும் கடலையும் மனசையும் கட்டுக்குள் கொண்டு வருவது இயலாத.. இயலவே இயலாத காரியம். இருந்தும் இருட்டில் திசையே அறியாத அவள் வரும் திசையினை நோக்கித் தேடுகிறது மனசு.

திங்கள், ஆகஸ்ட் 19

TET ANSWER KEY MATHS AND SCIENCE

 18.08.13 அன்று நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்கான  ( TET TENTATIVE ANSWER KEY PAPER II ) உத்தேச பதில்கள் புதிய விடியலில் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கான இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும்.  SUCCESS ACADEMY யின் பதில்கள் பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.


Rectified Tentative Answer Key இங்கு கிளிக் செய்து பெறவும்.

ஞாயிறு, ஆகஸ்ட் 18

TET ANSWER KEY SOCIAL SCIENCE

       18.08.13 அன்று நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு சமூக அறிவியல் பாடத்திற்கான  ( TET TENTATIVE ANSWER KEY PAPER II ) உத்தேச பதில்கள் புதிய விடியலில் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கான இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும். SUCCESS ACADEMY ன் பதில்கள் பெறுவதற்கு இங்கு கிளிக் செய்யுங்கள்.

சனி, ஆகஸ்ட் 17

ஆசிரியர் தகுதித்தேர்வு பதில்கள்

                       17.08.2013 அன்று நடந்த முதல் தாள் (PAPER I) இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வின் உத்தேசமான பதில்கள்  "TET TENTATIVE ANSWER KEY”  கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு    பெற இங்கு கிளிக் செய்யவும் மற்றும் புதிய விடியல் பயிற்சி மையத்தாரின் பதில்கள் பெற இங்கு கிளிக் செய்யவும். அறிவுக்கடல் பதிப்பகத்தின் உத்தேச பதில்கள் பெற இங்கும் கிளிக் செய்யுங்கள். விடியல் பயிற்சி மையத்தாரின் http://vidiyalarni.blogspot.in/  உத்தேச பதில்கள் பெற இங்கு கிளிக்கவும். ஒவ்வொரு தலைப்பு வாரியாக RaniTETPark என்ற தளத்திலும் உள்ளது. அதனை டவுன்லோட் செய்து பார்க்கவும். அதற்கான இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும்.  

குரங்கு கூட்டம்

ஆடை அழகுதான்
மனம்தான் அழுக்கு
ஆடை அழுக்குதான்
மனம் வெகு அழகு

            மனிதர்கள் உடலை அழகுபடுத்தும் விதத்தில் பாதிகூட மனம் அழகுபடுத்துவதற்கு நேரம் செலவிடுவதில்லை. இப்போதெல்லாம் விலை உயர்ந்த பொருட்களுக்குத் தரும் மதிப்பில் பாதிகூட மனிதர்களுக்கு தருவதில்லை.



வளைகின்றது
நெழிகின்றது
சுழன்றடிக்கிறது
புரட்டிப்போடுகிறது
குமுறுகிறது
குதூகலிக்கிறது
சொரணையின்றியிருக்கிறது
கவலைகொள்கிறது
ஏதோவொரு தருணத்தில் மனம்..!

வெள்ளி, ஆகஸ்ட் 16

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் பகுதி 5

          நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், இலக்கியங்கள் போன்றவை    இணையத்தில்    காணக்கிடைக்கின்றன.    அவற்றின் இணைப்புகளை    மட்டும் தொகுத்து ஏற்கனவே நான்கு பகுதிகளில் வழங்கியுள்ளோம். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களின் இணைப்பு மட்டுமே.  என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல.  முந்தைய  பகுதிகள்  செல்ல  கீழே  உள்ள  இணைப்பினை  கிளிக் செய்யவும்.

வியாழன், ஆகஸ்ட் 15

வெறுப்பாய்...

      என்னையே எனக்கு பிடிக்காதபோது மற்றவர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனதில் எனக்கு ஆச்சரியமொன்றுமில்லை. உலகத்தில் வெறுப்பு என்ற ஒன்று நிரந்தரமாகத் தங்கிப்போனது. தமக்கு பிடிக்காத ஏதோ ஒன்றின்மீது வெறுப்பு வருவது இயற்கைதான். அது உயிர்களிடத்தில் வரும்போதுதான் அதுவும் மனது என்ற ஒன்றைக்கொண்டிருக்கும் மனிதர்களிடத்தில் வரும்போதுதான் வெறுப்பின்மீது வெறுப்பு வருகிறது.


மனதினால்
நினைக்கும் ஆற்றல்
பெற்றதால்
மனிதனாகிறான்..!

செவ்வாய், ஜூலை 30

காதல் கவிதைகள்


நீ நீபாட்டுக்குத்தான்
இருக்கிறாய்
நான் நான்பாட்டுக்குத்தான்
இருக்கிறேன்
இந்த கண்ணுதான்
சொன்னபடி கேட்குறதே
இல்லை...!
---------------------------------------------
உன் சிரிப்பைவிட
அழகானதும் இல்லை
ஆபத்தானதும் இல்லை
உன் நினைவுகளை சேமித்தே
என் இதயத்தின் கனம்
கூடிவிட்டது..!
--------------------------------------------
உன் புகைப்படம்
பார்த்துக்கொண்டிருக்கும்
என்னிடம் கேட்டார்கள்
நண்பர்கள் 
என்ன செய்கிறாய்..?
சற்றும் யோசிக்காமல் சொன்னேன்
கவிதை 
வாசித்துக்கொண்டிருக்கிறேன்..!
---------------------------------------------
வல்லுநர்கள்
திகைத்துக்கொண்டிருக்கிறார்கள்
அழகான பூக்களில்
உன்னை எந்த வகையில்
சேர்ப்பது என்று..!
----------------------------------------------
பிழையில்லா பிரம்மன் 
படைப்பு நீ
உன் அழகை வர்ணிக்க
வார்த்தைகள் இல்லாததால்
கொஞ்சம் பூக்களை 
சேகரிக்கிறேன்..!
---------------------------------------------

தயவுசெய்து
தாவணி மட்டும் அணியாதே
உனது “இடை”வெளியை 
அதிகரிக்குது
நமது இடைவெளியை 
குறைக்குது..!
---------------------------------------------
அழகான கவிதை 
எழுதித்தரவேண்டும் 
என்கிறாய்
“மக்கு... மக்கு...”
உன்னைப்பற்றி 
எழுதினாலே போதுமே..!
---------------------------------------------
உன்னுடன் நான்
சண்டை போடுவதெல்லாம்
இறுதியில் கிடைக்கும்
அந்த ஒற்றை 
முத்தத்துக்காகவே..!
---------------------------------------------
உருவகங்களே இல்லாத 
கவிதையும் அழகாகிறது
உன் உருவத்தை
வர்ணிக்கும்போது மட்டும்..!
----------------------------------------------


பருகிக்கொண்டே

இருக்கிறேன்
பசித்துக்கொண்டே
இருக்கிறது
மனசு..!
---------------------------------------------

உனக்கென்ன...
ஒரு பார்வை
வீசிவிட்டு
சென்றுவிடுகிறாய்
எனக்குத்தான்
பக்கம் பக்கமாய்
கிழிகிறது
மனசு..!
---------------------------------------------

காலையில்
ஒரு குவளை
காபியும்
உனது கவிதையும்
போதும்
வாழ்க்கை சுகமாகிவிடும்..!

---------------------------------------------

ஜன்னலின் அருகே
நீ படிக்கிறாய்
ஜன்னல் வழியாக
உன்னை படிக்கிறேன்
நான்..!

-----------------------------------------

TRB PG ANSWER KEY 2013


21.07.2013 அன்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) தேர்வு நடந்தது. அனைத்துப் பாடத்திற்குமான (All Subject) உத்தேச பதில்கள் (Tentative Answer) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்.

ஞாயிறு, ஜூலை 28

TRB PG COMMERCE 2013 ANSWER KEY


21.07.2013 அன்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) தேர்வு நடந்தது. வணிகவியல் (COMMERCE) பாடத்திற்கான உத்தேச பதில்கள் (Tentative Answer) பாடசாலையில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்., கேள்வித்தாளின் இறுதியில் பதில்கள் உள்ளது.

வெள்ளி, ஜூலை 26

காமராஜர் இல்லம்

          காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். இவர் தேங்காய் வியாபாரம் செய்தவர். 1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள். காமராஜரின் தங்கையின் பெயர் நாகம்மாள்.  தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். பின்பு ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல போராட்டங்களில் கலந்து கொண்டார். 


         விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர்.  1954ம் ஆண்டு தமிழக முதல்வரானார். காமராஜரின் அமைச்சரவையில் குறைந்த எண்ணிக்கையிலேயே உறுப்பினர்கள் இருந்தனர். தன் ஆட்சிக்காலத்தில் கல்விக்கு பெரும்பணியாற்றினார்.

TET STUDY MATERIAL (குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்)

ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) கேட்கப்படும் குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (CHILD DEVELOPMENT AND PEDAGOGY) ஆயிரம் வினாவிடைகளின் தொகுப்பினை பெற இங்கே கிளிக் செய்யவும்.

TRB PG BOTANY 2013 ANSWER KEY

21.07.2013 அன்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) தேர்வு நடந்தது. தாவரவியல் (BOTANY ) பாடத்திற்கான உத்தேச பதில்கள் (Tentative Answer) கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்.

TRB PG CHEMISTRY 2013 ANSWER KEY


21.07.2013 அன்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) தேர்வு நடந்தது. முதுகலை வேதியியல் (CHEMISTRY ) பாடத்திற்கான உத்தேச பதில்கள் (Tentative Answer)  பாரதி பயிற்சி மையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு பெற இங்கே கிளிக் செய்யவும். 


புதன், ஜூலை 24

TRB PG TAMIL 2013 TENTATIVE ANSWER KEY

21.07.2013 அன்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) தேர்வு நடந்தது. தமிழ் (TAMIL ) பாடத்திற்கான உத்தேச பதில்கள் (Tentative Answer) புதிய விடியல் பயிற்சி மையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்.

TRB PG HISTORY 2013 TENTATIVE ANSWER KEY

21.07.2013 அன்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) தேர்வு நடந்தது. வரலாறு (History ) பாடத்திற்கான உத்தேச பதில்கள் (Tentative Answer) விடியல் பயிற்சி மையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்.

திங்கள், ஜூலை 22

PG TRB 2013 Tentative Answer Key

21.07.2013 அன்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) தேர்வு நடந்தது. அதற்கான கல்வியியல் ( EDUCATION ) மற்றும் பொது அறிவுக்கான (GK) உத்தேச பதில்கள் வேலூர் விடியல் பயிற்சி மையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு பெற இங்கே கிளிக் செய்யவும். 

செவ்வாய், ஜூலை 9

TET 2013

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் (Education) சம்பந்தமான  பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு மற்றும் அனைத்து பாடங்களுக்கான தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. 


கல்வியியல் வினாக்கள்

அனைத்து பாடங்களுக்கும் ஸ்டடி மெட்டீரியல்

TET Test material

TET Study Material

TET Study Material

தினகரன் TET Study Material

Current Affairs

தினமணி

பள்ளிச்சோலை

டிஇடி

TET Exam

TET Social Science

TET All Subject

திங்கள், ஏப்ரல் 1

காதலின்பின் மெளனம்



           நடந்துசெல்லும் பாதையில் கையில் கிடைக்கும் மரத்தின் இலைகளை பறிக்கும்போது அதற்கு வலிக்கும் என்று உணர்ந்திருக்கிறீர்களா!
காலில் எறும்புகள் மிதிபடும் என்பதை நாம் ஒருபோதும் யோசிப்பதில்லை..  அதற்கு நேரமும் இல்லை. இயல்பாய் இருப்பவனுக்கே இந்த நிலமை என்றால்.... காதலித்துப்பார் உலகத்தில் நீங்கள் மட்டுமே இருப்பதாய் உணர்வாய். உலகம் மறக்கும். சுற்றம் மறக்கும்.

காதலி
சரியென்று சொன்னால்
புல்லின் நிழலில் கூட
ஓய்வெடுக்கலாம்
எறும்புகளுடன்
ஓட்டப்பந்தயத்தில்
கலந்துகொள்ளலாம்..!


எதிர்வரும் மனிதர்கள் எந்த நிறத்தில் நம்முடன் பழகுகிறார்கள் என்பதை நம்மால் எளிதில் உணரமுடியாது. மனசுக்கு நிறமுண்டு. ஆனால் அந்த  நிறம் அவனுக்கு மட்டுமே தெரியும்.

காதலி
மனசின் நிறத்தை
கண்ஜாடையில்
உணர்ந்துகொள்வான்
காதலன்..!


உலகம் எளியோர்களை எப்போதும் மதித்ததில்லை. தினமும் கோடானகோடி உயிர்கள் இறக்கின்றன. அத்தனையும் நமக்கு செய்திதான். நம்முடைய உறவினர் ஒருத்தர் யாரேனும் இறந்துவிட்டால் துக்கம் தாளாமல் அழுகிறோம்.

காதலி
மனசும் இறக்கிறது
நிராகரிக்கப்பட்ட
காதலால்..!


கோபங்கள் மனசை காயப்படுத்தும். கோபத்தில் வரும் வார்த்தைகளுக்கு முகம் கிடையாது. அது யாரையும் பார்க்காது. அதன் கடிவாளம் நம்மிடம் உள்ளவரை கோபம் நம்வசப்படும். காதலிலும் வரும் கோவம் வார்த்தைகளை வரவிடாது. அது மெளனக்கோபம்...

பறவைகள்
கிளைகளை நம்புவதில்லையாம்
நானும் உன்னை நம்பவில்லை
உன் மனதை மட்டுமே..!


காதலில் காதலியை  மட்டுமே அங்குலம் அங்குலமாய் தெரியும். காதலில் தோற்றுப்பார் உலகமும், வாழ்வும் புரியும். வலி என்பதன் அர்த்தமும் புரியும். மெளனத்தில் உள்ள அர்த்தம் புரியும். 


வார்த்தையை கொல்வதும்
மெளனம்
உன்னை கொல்வதும்
மெளனம்தான்
மெளனம் அழகானது
பிரிதொருமுறை
பேசுவாய் எனும்வரையில்
மெளனம் சித்திரவதையானது
பேசவேமாட்டாய் எனும்போது
நானும் மெளனிக்கிறேன்.. !

சனி, மார்ச் 2

தொலைந்த வார்த்தைகள்

"இப்போதும் 
பேசிக்கொண்டுதானிருக்கிறோம்
மெளனங்களால்…"

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோவொன்றை தேடிக்கொண்டுதானிருப்பார்கள். நான் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

“புரிந்து கொள்ளப்படாத மொழி
மெளனம்”



வைகறைப்பொழுது, அந்திப்பொழுது, இரவுப்பொழுது, நடுச்சாமம் எந்நேரமும் வார்த்தைகள் என்மீது பிள்ளையார் எறும்பாய் ஊறிக்கொண்டுதான் இருக்கும். சிலநேரங்களில் காக்காய் கடிபோல் கடித்தும் என்மீது துப்பியும் விழுந்துகிடக்கும்.

”பலயுகங்களாய்
காற்றில் பறவைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன
தரையில் பல உயிரினங்கள் எழுதுகின்றன
நீரிலும் மீன்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன
எதுவும் புரியாமலே தாவரங்கள் தலையசைக்கின்றன”

எந்தப்புத்தகத்திலும் இல்லாத வார்த்தைகளை நான் தேடிக்கொண்டு இருக்கின்றேன். நிறையப்பேர் வார்த்தைகளை விற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நான் அவற்றை எல்லாம் பொறுக்கிகொண்டு இருக்கிறேன்.

“ வார்த்தைகளுக்கும் கால் முளைக்கும்
பொய்பேசும்போது! “

வார்த்தைகளை கோர்த்துப் படிக்கும்போது அவை ரசிக்க வைக்கிறது. அது ரகசியக்காதலையும் எழுதிச்செல்கிறது.

“ நீ எழுதும் வார்த்தைகளில்
நிச்சயமாய் நானில்லாமல் இருக்கலாம்
ஆனால்..
உன் இதயத்தசைத் துளிகளில்
எங்கேனும் சிறிது ஒட்டிக்கொண்டுதானிருப்பேன் “

நமக்குத் தெரிந்த அத்தனை வார்த்தைகளையும் பேசித்தீர்த்துவிட்டோம். நான் உன்னிடம் கொஞ்சம் கடன் வாங்கிக்கூட பேசியிருக்கிறேன். வார்த்தைகளும் ஒருநாள் தீரும் என்பதை அறிந்துகொண்டேன். எனக்கான வார்த்தைகள் எங்கேனும் ஒழிந்து கொண்டிருக்கலாம். எனக்கான வார்த்தையை நீ எழுதியவற்றில் இருந்தே நான் அறிந்துகொண்டேன். அது மெளனம்…

”காதலித்துப்பார்
பேசிக்கொண்டே இருப்பாய்
காதலில் தோற்றுப்பார்
மெளனமாய் இருப்பாய்”






சனி, பிப்ரவரி 16

நானும் ஆவிதான்


      என்னுடைய பிரச்சனையைத் தீர்க்க மருத்துவரிடம் சென்றுதான் ஆகவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். விசாரித்துப் பார்த்ததில் டாக்டர் ஆவிதாசன்தான் சிறந்த மருத்துவர் என எல்லோரும் கூறினர். அவருடைய பெயரே வித்தியாசமாக இருந்தது. அவர்தான் ஆவிகளுடன் பேசுபவராம். இரவு எட்டு மணிக்கு அவருடைய மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையைச் சுற்றிலும் புகைமண்டலமாக இருந்தது. எனக்கு மட்டும்தான் இப்படி தெரிகிறதா ! யோசித்தவாறே சென்றேன்.
     மருத்துவர் என்னை அழைத்து இருக்கையில் அமரவைத்தார்.
    " உங்களுக்கு என்ன பிரச்சனை?" டாக்டர் விசாரித்தார்.
     எனக்கு சில வாரங்களாக எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.
     என்ன வித்தியாசம்?
     யாரைப்பார்த்தாலும் பேய் மாதிரி தெரிகிறது. பல் நீண்டும், முடியை விரித்துப் போட்டவாரும் தெரிகிறது. எங்குபார்த்தாலும் புகை மண்டலமாக இருக்கிறது.

         எப்போதிருந்து?
     இரண்டு வாரத்திற்குமுன் டூவீலரில் செல்லும்போது கீழே விழுந்துவிட்டேன். தலையில் அடிபட்டது. அப்போதிருந்துதான்…
ஓ! அப்போ இது சாதாரண பிரச்சனைதான்.
     “சாதாரண பிரச்சனையா !” என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்தால்தான் உங்களுக்கு இந்த பிரச்சனையின் வீரியம் புரியும்.
      சரி...! வேறெதாவது உங்களுக்கு வித்தியாசமாகத் தோணுகிறதா?
    ஆமாம்.. முருங்கை மரத்தினைப்பார்த்தால் தொங்கவேண்டும்போல் உள்ளது. யாரையாவது பிடித்து ஆட்டவேண்டும்போல் இருக்கிறது. எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. சிலநேரம் ரத்தம் குடிக்கவேண்டும்போல் உள்ளது. இப்போது உங்களைப் பார்த்தால்கூட ஆவி மாதிரிதான் தெரிகிறது.
      டாக்டர் சிரித்தார்.
      சார்.. நான் சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன்.. நீங்க சிரிக்கிறீங்க !
      “வீட்டிற்கு போக பிடிக்காதே?” டாக்டர் அன்பாக விசாரித்தார்.
      அட! ”ஆமாம் சார்” என்றேன்.
      சுடுகாட்டுக்கு இப்போ தனியா பயமில்லாமல் போவீங்களே?
      ஆமாம்..ஆமாம்.. இதுக்கு என்ன சார் ட்ரீட்மெண்ட்? சரியாயிடுமா?
    இதுக்கு மருந்து மாத்திரை எதுவும் தேவையில்லை. இது நார்மல்தான்..
    என்னது நார்மலா!
    ஆமாம் ஆவியா இருந்தால் இது நார்மல்தானே.. மனிதர்கள்தான் பயப்படுவார்கள்.
    “ஆவியா? நானா?” ஆச்சரியமாகவும் பயத்துடனும் கேட்டேன்.
    ஆமாம்.. நீங்கள் தலையில் அடிபட்டு இறந்துவிட்டீர்கள். இப்போது ஆவிகள் உலகத்தில் இருக்கிறீர்கள்.
     அப்போ நீங்கள் மட்டும் எப்படி இங்கே? ஆவிகளுடன் பேசுகிறீர்கள்...
    ஹாஹா....ஹா.. என சிரித்துக்கொண்டே சொன்னார். நானும் ஆவிதான். புதிதாக ஆவிகள் உலகத்திற்கு வருபவர்களுக்கு இதுதான் பிரச்சனை. அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கத்தான் இந்த டாக்டர் ஆவிதாசன்.
     ஆவி அரண்டு போய் அமர்ந்து இருந்தது.



வியாழன், ஜனவரி 17

பூ..காய்..பருத்தி

”நல்லவேளை
பரிமாறும்போதே
பசியாறிவிட்டேன்”

          இத்தனை நாள் ஒழுங்காய்தானே இருந்தான். எங்கிருந்து வந்தது இந்த காதலும், கத்தரிக்காயும். அப்பாவின் கைபிடித்துக்கொண்டுதான் அலைவான். அப்பாதான் அவனுக்கு எல்லாமும்... அவனுக்கு இருக்கும் ஒரே நண்பன் அப்பாதான். இப்போது அவனிடம் கேளுங்கள்.. உன்னுடைய முதல் எதிரி யாரென்று? நிச்சயம் அப்பாதான்.

”எந்த ஒளி பட்டால்
இந்த பூ பூக்கும்”

           அவளுக்கு எல்லாமே அம்மாதான். அம்மா அவளுக்கு தலையில் அழகாக ரெட்டை ஜடை பின்னி, சிவப்பு கலர் ரிப்பன் கட்டி, கனகாம்பரம் பூச்சூடி அழகு பார்ப்பாள். அம்மாதான் உலகம். அம்மாவிற்கு பிடித்த எல்லாமும் இவளுக்கும் பிடிக்கும். இப்போது அவளிடம் கேட்டுப்பாருங்கள். உனக்கு பிடித்தது யாரென்று? நிச்சயம் அம்மா இல்லை.

மண்ணும் கருக்கொண்டது
மழைநீர் புகுந்ததால்!


        அவளின் நினைவுகள் அவனை ஆட்கொண்டது. அவனுடைய சைவ நினைவுகள் அசைவமாக மாறிக்கொண்டிருந்தன. திமிர் பிடித்த கரையானாய் அவன் மனசை அரித்துக்கொண்டிருந்தது. எப்படியாவது கேட்டுவிடவேண்டும். நீ என்னை காதலிக்கிறாயா? கண்ணாடி முன்தான் கேட்டுக்கொள்ள முடிந்தது.
   
”பறந்துவந்த ஒரு
அசைவ விமானம்
கொத்தத்தொடங்கின
அவள் இதயத்தை”

       இவன் எல்லோரையும் போல்தான் சைக்கிள் ஓட்டுகிறான். பிறகு ஏன் இவன் மட்டும் என் மனதில் புகுந்தான். ஒருவேளை பறக்கிறானோ! மனப்பிரமையா? அவளாக மனதில் கேட்டுக்கொண்டாள். இவள் சைக்கிளை உரசியபடி வேகமாகப் பறந்துசெல்வான். திடீரென மனசையும் உரசிச்சென்றுவிட்டான்.

“சத்தியமாக
இயல்பாகத்தான் இருக்கிறேன்
பலதடவை சொல்லிக்கொண்டான்
சொரணையில்லாமல்”

       குளியலறைக்குள் புகுந்துகொண்டால் பச்சைத் தண்ணீர் சுடுதண்ணீர் ஆகும்வரை குளித்தான். தலைமுடியை சீவ ஆரம்பித்தால் சீப்பு நுனி தேயும் வரை சீவிவிட்டு பின்பு முடிகலைத்துதான் செல்வான். சாப்பிட்டுவிட்டு பசிக்குது என்பான். இப்போதெல்லாம் ஆடையில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டான். அவள் உடுத்தும் ஆடையின் நிறத்தில் அள்ளிக்குவித்தான்.
       
“ பால் கொதித்தது
ஆவியானான் அவன்”

        அவளுக்கு ஜன்னல் வீடானது. இப்போதெல்லாம் தலைகீழாகவே படிக்க ஆரம்பித்துவிட்டாள். வெறும் தட்டில் சாப்பிட ஆரம்பித்தாள்.  அடுப்பில் பாலை பொங்கவிட்டு வேடிக்கை பார்த்தாள். கண்கள் நிலைகுத்தி தன்நிலை மறந்தாள். பில்லி சூனியமோ என நினைத்து வீட்டில் பயந்தார்கள். அது  அந்த ஆண்பிள்ளையின் சூனியம்  என அறியாமலேயே!

”பழம் அழகுதான்
வண்டுதான் குடைந்துகொண்டிருந்தது”

இருவரும் மனசைத் தொலைத்து தேடிக்கொண்டிருந்தார்கள். வாழ்க்கை அவர்களை தொலைத்துவிட்டிருந்தது.

“இதயம் வரைந்துகொண்டிருந்தேன்
ஒடிந்தது பென்சிலும்”
 
      இருவருக்கும் மதிப்பெண் குறைந்தது. வீட்டில் காது நிறைந்து வழியும்படி திட்டு விழுந்தது. பள்ளி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, நண்பர்கள் சரியில்லை, நேரம் சரியில்லை, ஊரே சரியில்லை என்று பலவாறு சிந்தித்தனர் அவன் வீட்டாரும், அவள் வீட்டாரும். அவர்களுக்கு யார் சொல்வது? இருவருக்கும் ஹார்மோன் சரியில்லை என்று.

“நான் பார்த்தேன்
புள்ளியாய் நீ
அங்கிருந்து
நீயும் பார்
நானும் புள்ளிதான்”

செவ்வாய், ஜனவரி 8

காமெடி காதல்


உன்னை பீச்சுக்கு அழைத்தேன்
வரமறுத்தாய்
கோவிலுக்கு அழைத்தேன்
உடனே வந்தாய்
அப்புறம்தான் தெரிந்தது
ஒருவாய் சுண்டலுக்கு என்றாய்
நீ என்னையே உற்றுப்பார்த்தாய்
வெட்கமாய் இருந்தது
அப்புறம்தான் தெரிந்தது
நீ பார்த்தது
என் சம்பள கவரை என்று
ஜவுளிக்கடை அழைத்தாய்
சந்தோசமாக வந்தேன்
எனக்கு முந்நூறு ரூபாய் சட்டை
இன்னும் சந்தோசப்பட்டேன்
உனக்கு ஐயாயிரம் ரூபாய் புடவை
பில்லை மட்டும் என்னிடம் கொடுத்தாய்
மெலிந்துபோய் இருக்கிறாய்
நன்றாக சாப்பிடு என்றாய்
என்ன ஒரு அக்கறை என நினைத்தேன்
உணவகம் அழைத்து சென்று
வாயில்வராத பெயரை எல்லாம் சொல்லி
ஆர்டர் செய்தாய்
எனக்கு ஒரு தட்டும் நீ முப்பது
தட்டுமாய் தின்னு தீர்த்தாய்
என் சம்பள கவர் இன்னும் மெலிந்தது
நீ இன்னும் பருத்தாய்
இறுதியாக சொன்னாய்
நான் லவ்வுவது உன்னையல்ல
உன் நண்பனை என்று
அவனை பழிவாங்க நினைத்தேன்
நல்லபடியாகவே நடந்தது
நானும் சொன்னேன் நான் லவ்வியது
உன்னையல்ல
உன் தங்கைகளை என்று!

இறுதிப்பயணம்


அதிகாலை நேரம்

கதிரவனின் கதிர்கள்
சிறகை விரித்து வெப்பம் பரப்பியது
முகவரி இல்லாத இடத்திற்கு
தனிமைப்பயணம் மேற்கொள்ள
ஆயத்தப்படுத்திக்கொண்டேன்
பயணத்திற்கு தேவையானவற்றை
தயார்செய்தேன்
எடுத்துச்செல்ல ஒன்றுமில்லைதான்
சில மாதங்கள் முன்பு
சுற்றுலா கிளம்பும் ஒரு வேளையில்
என் ஒல்லியான தேகத்தினை
கண்ணாடியில் பார்த்தபோது
மூக்கு கொஞ்சம் அளவாக
இருந்தால் நன்றாகயிருக்கும்
இன்னும் கொஞ்சம் குண்டாக
இருந்தால் நன்றாகயிருக்கும்
கொஞ்சம் சிவப்பாக 
இருந்திருக்கலாமோ என
எல்லாம் குறைகளாகவே தெரிந்தன
இப்போது எதைப்பற்றியும் யோசிக்கவே இல்லை
மதியம் தாண்டிவிட்டது
என்னை வழியனுப்ப பலர்
வெளியூரிலிருந்தும் வந்துவிட்டனர்
வீட்டைவிட்டு வெளியே வந்தேன்
சூரியனின் வெப்பம் 
தகிப்பது போல 
வந்தவர்கள் உணர்ந்தனர்
தெருவில் ஒரு பெண் அழுதுகொண்டிருந்தாள்
தன் காதலன் மறைந்துவிட்டதாக
ஒரு பெரியவரும் அழுதார்
தன் மகன் இறந்துவிட்டதாக
ஒரு சிறுமி அழுதாள்
தன் சித்தப்பா செத்துவிட்டதாக
ஒரு பாட்டி அழுதாள்
தனக்கு முன் பேரன் இறந்துவிட்டதாக
எல்லாம் ஒருவர்தான்
முகமூடிகள்தான் வேறு
பயணத்தினை தொடர்ந்தேன்
கூடவே சிலர் வந்தனர்
செத்ததூரம் துணைக்கு
வருவதாகக் கூறினர்
சிலர் அழுவதும் 
பலர் மனதுக்குள்
சந்தோசப்படுவதுமாக இருந்தனர்
காதலனை இழந்த பெண்
மட்டும் உயிரைக்கொடுத்து
அழுதுகொண்டிருந்தாள்
யாரும் சட்டை செய்யவில்லை
வழியில் மணக்கோலத்தில்
ஒரு ஊர்வலம்
என்னைப்பார்த்ததும் திகைத்து
ஒதுங்கி வழிவிட்டனர்
மணமகனும் மணமகளும் 
சந்தோஷத்தில் திளைத்தனர்
பலர் வியர்வை வழிய வழிய
என் உடன் வந்தனர்
என்னை மகிழ்ச்சியாக்க 
முயன்று தோற்றனர்
மலர் தூவியும்
சத்தங்கள் எழுப்பியும்
வெடிபோட்டும் வந்தனர்
மாலைநேரம்
சூரியன் ஓய்வெடுக்கவும்
நிலவு தன் பணியைத் 
தொடரவும் தயாராகியது
நேரமாகிவிட்டது
என சிலர் அவசரப்படுத்தினர்
ஒவ்வொருவரும் 
பரபரப்பாக அவரவர் 
வேலையில் இயங்கினர்
இரவு கருப்பு நிறத்தை 
தன்மேல் பூசிக்கொண்டது
நிலவு யாருக்காகவோ
ஒளிபாய்ச்ச தொடங்கியிருந்தது
எப்போதும்போலவே
மிகவும் குளிர்ச்சியாக இருந்தது
பின்பு பிரயாணக்களைப்பில்
எனக்கான இடத்தில் படுத்துக்கொண்டேன்
சுத்தமாக இருட்டியிருந்தது
காற்றும் இன்னபிற
சத்தங்களும் அடங்கிவிட்டிருந்தன
வந்தவர்கள் நேரமாகிவிட்டது
எனப் புலம்பியபடியே
கிளம்பிவிட்டிருந்தனர்
தனிமையில் என் பயணத்தினைத்
தொடர்ந்தேன் இனிமையாகவே!

கடைசி பெஞ்ச் மாணவன்

கடவுள் உன்னை 
இலக்கணப்படிதான் படைத்துள்ளார்
இம்புட்டு அழகா!
நீயும் தமிழும் ஒன்றுதான்
மிக இனிமையாக

தயவு செய்து
ஆங்கிலத்தில் பேசாதே
உன் மனதைப்போலவே
எனக்கு எதுவும் புரியவில்லை

உன்னைக் கூட்டவும் முடியாமல்
கழிக்கவும் முடியாமல்
என் காதலில்
பெருத்துக்கொண்டே போகிறேன்
உன்னைப்பார்த்த நாளிலிருந்து
கணக்கில் நான் ஜீரோதான்

இதயத்தின் படம் வரைய
அறிவியல் ஆசிரியர்
கட்டளையிட்டார்
நான் உன்னை வரைந்து
கொண்டிருக்கிறேன்

புவியின் அமைப்பை போல
உன் உடலின் அமைப்பினை
கொஞ்சம் வரைந்து கொடு
இதயம் எங்குள்ளது
என அறிந்து கொள்வேன்

விரைந்து வா!
உன் தந்தை என்மீது
போர் தொடுக்கும்முன்
இருவரும் சேர்ந்து 

 நம் படைகளைப் பெருக்கி
புது வரலாறு படைக்கலாம்!