சனி, டிசம்பர் 31

பிளாக்

       பிளாக் எப்படி ஆரம்பிப்பது? பல்வேறு திரட்டிகளை எவ்வாறு இணைப்பது? பிளாக்கில் பதிவுகள் எவ்வாறு இடுவது?கருத்துரை பட்டியலின் கீழ்வரும் word verification நீக்குவது எப்படி?பிளாக்கின் வடிவமைப்பை மாற்றுவது எப்படி?google, yahoo, bing போன்ற தேடு பொறிகளுக்கு நம் பிளாக்கை எப்படி தெரிவிப்பது? போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு நிறைய நண்பர்கள் பதிவு எழுதியுள்ளார்கள். அதனை தொகுத்து வழங்கியுள்ளேன்.புதிதாக பிளாக் தொடங்க நினைப்பவர்களுக்கு இது நிச்சயமாக உதவும்.

வெள்ளி, டிசம்பர் 9

பிஞ்சுவிரலின் பென்சிலோவியம்

நீ வரையும் 
ஓவியத்தின் வடிவம்...

அப்போது பெய்த 
மழையில் கரையும் 
செம்மண் புழுதியைப்
பார்த்து வரைந்ததா?

புதன், டிசம்பர் 7

சிறகொடிந்த பட்டாம்பூச்சி

      நேற்றைய தினத்தந்தி நாளிதழில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் மரணம் என்ற செய்தி படித்தோர் மனம் நிச்சயம் பதைபதைத்துப் போயிருக்கும். சாப்பிடக்கூடத் தெரியாத வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம்.

ஞாயிறு, டிசம்பர் 4

பேச்சை முடிப்பது எப்படி?

   முன்னொரு பதிவில் பேச்சு என்பது பற்றி நிறையப் பேசியிருந்தோம். இப்பதிவில் ஒரு மேடைப்பேச்சினை எவ்வாறு முடிப்பது என்பதைப் பற்றி மதிப்பிற்குரிய அ.கி.பரந்தாமனார் அவர்கள் எழுதிய நூலின் அடிப்படையில் பகிர்ந்துகொள்கிறேன்.
      ஒருவர் மேடைப்பேச்சினைச் சிறப்பாக தொடங்கியிருப்பார், பேசும் பொருளினைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்திருப்பார். ஆனால் பேச்சின் முடிவில் கவனம் செலுத்தத் தவற விட்டால், பேசிய பேச்சு மதிப்பிழந்து போகும். வள்ளுவரும் பயனுள்ள பேச்சுதான் வேண்டுமென்பதை

வெள்ளி, டிசம்பர் 2

ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்

பருவத்தில்...
வயசு நெருங்கிடுச்சி
சீக்கிரமா கல்யாணத்த முடிங்க!

முகூர்த்த நேரத்தில்...
நல்ல நேரம் போகுது
சீக்கிரம் தாலிய கட்டுங்க!

வீட்டில்...
சீக்கிரம் எந்திரிங்க
பிள்ளைகளை சீக்கிரமா
ஸ்கூலுக்கு கிளப்புங்க

ஞாயிறு, நவம்பர் 27

பேச்சு

பேச்சக் குறைங்கடா...
அவன் பேச்சைக் கொண்டுபோய் குப்பைல போடு...
பேச்சு பேச்சாதான் இருக்கணும்...
இப்படியே பேசிக்கிட்டேப் போனா எப்படி?...
பேசியேக் கொல்லாதடா...
பேச்சு...அதுலதான் எத்தனை வகை. எத்தனை விதமாகப் பேசுகிறோம்.

வியாழன், நவம்பர் 17

வழிப்போக்கர் மண்டபம் - அழிவை நோக்கி

      இப்போதெல்லாம் நடந்து போவது என்பதே உடற்பயிற்சிக்காக மட்டும்தான். மற்ற நேரமெல்லாம் அடுத்த தெருவிற்கு போவதற்கு கூட பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறோம்.     ஆனால்   அந்தக்  காலத்தில் தூர தேசத்திற்கு போவதற்கு கூட நடந்துதான் செல்லவேண்டும். வேறுவழியுமில்லை. இந்தக் காரணத்தில்தான்   அவர்களின்   உடலும்   உள்ளமும்   சுறுசுறுப்பாக இருந்தது.     

ஞாயிறு, நவம்பர் 13

செல்லின்றி அமையாது உலகு

செல்லின் பரிணாமத்தில்
குரங்கிலிருந்து மனிதன்.
பரிணாமம்....
மனிதனின் செல்லுக்கு மட்டும்தானா?
மனிதன் வைத்திருக்கும் செல்லுக்கும்தான்!

வெள்ளி, நவம்பர் 11

ஆன்லைனில் அனுப்பும் போட்டோவின் ஃபைல் அளவை மாற்ற

       நாம் சிலநேரம் ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்புவோம். அப்போது போட்டோவினையும் அனுப்ப வேண்டிய சூழல் உருவாகும். நாம் வைத்திருக்கும் போட்டோவின் அளவானது சிலநேரம் MB யில் இருக்கும். அதை சில விண்ணப்பங்கள் அனுப்பும்போது KB அளவில் அனுப்ப சொல்லியிருப்பார்கள். MB அளவில் இருக்கும் படத்தினை மிக எளிதாக KB அளவில் மாற்ற IMAGE OPTIMIZER என்ற வெப்சைட் நமக்கு உதவுகிறது. அந்த வெப்சைட் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

திங்கள், நவம்பர் 7

அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள்

ஓகே! போதும்... உங்க அட்வைஸ்
குழந்தைகளுக்கு நாம் அதிகம் தருவது அட்வைஸ். அது எளிமையானது.யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். வாழ்க்கையில் முன்னேற ஐடியா கொடுக்கத்தான் ஆளில்லை. குழந்தைகளை வாழ்ககையில் வெற்றிபெறச் செய்ய பெற்றோர்கள் முக்கியமாகத் தர வேண்டியது ஐடியா...ஐடியா...ஐடியா மட்டுமே.

வெள்ளி, நவம்பர் 4

கைக்கெட்டும் தூரம் வானம்!

              நாம்  ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தூரத்தைக் கடக்கலாம்.   நடந்து சென்றால்  5  அல்லது   6   கிலோமீட்டர்.  பேருந்தில்    பிரயாணித்தால்  60 -80 கி.மீ.விமானத்தில் சென்றால் 400 - 500 கி.மீ.  சில விமானங்கள் மணிக்கு 1500 கி.மீ கடக்கும் வல்லமை பெற்றுள்ளன. ராக்கெட்டுகள் இதைவிட அதிக தூரத்தை (சுமார் 20,000 கி.மீ) கடக்கலாம். இவற்றையெல்லாம் 'கி.மீ ' என்ற அலகால் எளிதில் அளந்து விடுகிறோம்.

புதன், நவம்பர் 2

ஆசிரியர்களுக்குத் தேவையான வெப்சைட்

ஆசிரியர்கள் பற்றிய செய்திகள்,அவர்களுக்குத் தேவையான அரசாணைகள், விதிமுறைகள், தமிழக அரசால் ஆசிரியர்களுக்கு என அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் மற்ற நாளிதழ்களில் உள்ள பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள பல்வேறு தளங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றின் பட்டியலை இணைத்துள்ளேன்.

செவ்வாய், நவம்பர் 1

தாவரவியல் - வினா விடைகள்.


போட்டித்தேர்வுகளில் தாவரவியலில் கேட்கப்படும் முக்கியமான வினாவிடைகளின் தொகுப்பு.நேரம் கிடைக்கும்போது வழங்கி வருகிறேன்.இப்போது மேலும் சில வினா விடைகளின் தொகுப்பு. பழைய வினாக்களின் தொகுப்பை காண  கீழேயுள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.
தாவரவியல் 13 
தயவு செய்து உங்கள் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். அதன்மூலம் பல நண்பர்களுக்கு சென்றடையும்.

ஞாயிறு, அக்டோபர் 30

பிளாக் மற்றும் வெப் - படங்களுடன்

    வெப்:
            நம் நிறைய பேருக்கு 'வெப்'பை பற்றியும், பிளாக்கை பற்றியும் நன்றாகத் தெரியும். தெரிந்திருந்தாலும் அவற்றில் சில வகைகள் உண்டு. அவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதனைப் பற்றி முழுதாக அறிந்து கொள்ளாதவர்களுக்கும் இது பயன்படும்.

நித்தி - சீரியஸா எடுத்துக்காதீங்க

நித்தி... பிரஸ்மீட் வீடியோ... கொஞ்சம் காமெடி கலந்தது ( பழசுதாங்க). அனைவரும் இந்த வீடியோவைக் கொஞ்சம்  ( இல்ல...இல்ல ரொம்பவே ) 

வியாழன், அக்டோபர் 27

மொக்கராசுவின் கட்டில்

மொக்கராசு... பேர்தான் அப்படி.
ஒல்லியான சரீரம்...அடர்த்தியான மீசை.....ஒடுங்கிய கன்னம்.....
இடுங்கிய கண்கள்....தலையில் கொஞ்சம் முடி... இடுப்பில் ஒரு வேஷ்டி.
அவர் சட்டை அணிந்ததே இல்லை. எப்பவும் ஒரு துண்டுதான்.

திங்கள், அக்டோபர் 24

பாசத்திற்கு ஏங்கும் பாட்டி

பாசமான பாட்டி!!
தீபாவளி அன்னிக்கு...

யேய்!! புது டீவி
சின்னப் பையனின் குரல்
டேய் பேராண்டி
இது பாட்டியின் குரல்...

ஞாயிறு, அக்டோபர் 23

நாற்று

       அக்டோபர் 22 சனிக்கிழமை இராஜபாளையத்தில் நாற்று என்ற இலக்கிய அமைப்பின் மூலம் செவ்வந்தி மாலை என்ற நிகழ்ச்சி ஸ்ரீ பி.எஸ்.கே. திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது. அவர்கள் வழங்கிய பிரசுரத்தில்

செவ்வாய், அக்டோபர் 18

தாவரவியல் - பொது வினா விடைகள்


     அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் தாவரவியல் பாடத்தில் அடிக்கடி கேட்கப்படும் வினாவிடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தவகை வினாவிடைகள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு உதவும்

திங்கள், அக்டோபர் 17

வேலையில்லாதவனின் டையரி

பெயர் : வேலையில்லாதவன்
பிறந்த தேதி : கல்யாணம் முடிஞ்சிருந்தா இரண்டு பிள்ளைகள் இருக்கும்
முகவரி : வெட்டி ஆபிஸர்'னா எவனாயிருந்தாலும் கரெக்டா சொல்லிடுவான்
சாதி : சொன்னா மட்டும் வேலை கிடச்சுருமாக்கும்

ஞாயிறு, அக்டோபர் 16

தேர்தலில் தோத்தவர்களின் கமெண்ட்ஸ்

     இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் தெரிஞ்சுரும்.    சில   பேர்  உள்ளாட்சி'ல  தோத்துட்டா என்ன?   எங்க  வீட்டு  ஆச்சியிடம்   கண்டிப்பாக ஜெயிப்பேன்...  என்று சில பேர் மார்தட்டி எஸ்கேப் ஆகுவது உண்டு.        ஆனால் சில வேட்பாளர்கள் வெளியே    சொல்லாமல்     உள்ளுக்குள்ளேயே அழுவதுண்டு.   அப்படி   தேர்தலில்    தோற்றவர்கள் சொல்லும்   காமெடி    கமெண்ட்...

சனி, அக்டோபர் 15

எனக்கு வாய்த்தவள்!

எனக்கு வாய்த்தவள்!!
காலை எழுந்தவுடன்
காபியும் போடுவாள்!
கொஞ்சம் காலையும் அமுக்குவாள்!

புதன், அக்டோபர் 12

சந்தேக மனைவி!!!

              கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் சந்தேகப்படுவது   இயல்பு.  சொல்லப்போனால் அது அளவுக்கு   மிகுதியான   அன்பின்   வெளிப்பாடு எனலாம். ஆனால் அதுவே அளவுக்கு மீறினால் பிரச்சனைதான். இப்படித்தான்  ஒரு ஊரில் (பின்ன என்ன காட்டிலா?)  கணவனும்,  மனைவியும் இருந்தார்கள்.

செவ்வாய், அக்டோபர் 11

குருட்டுக் கண்கள்

     நமக்கு உள்ள  உறுப்புகளில் கண்கள் முக்கியமான இடத்தைப்    பிடிக்கிறது.  அந்த  கண்களும் எல்லோருக்குமே ஒருநேரத்தில் குருடுதான் என்றால் நம்ப முடிகிறதா?

திங்கள், அக்டோபர் 10

தாவரவியல் - GENERAL STUDIES - Q & A அனைத்துத் தேர்வுகளுக்கும்


       அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் தாவரவியல் பாடத்தில் அடிக்கடி கேட்கப்படும் வினாவிடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.தமிழில் வழங்கலாம் என்றால் நேரம் ஒத்துழைக்கவில்லை.இந்தவகை வினாவிடைகள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு உதவும். நிறைய நண்பர்கள் TRBயில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான வினா விடைகள் எதிபார்க்கின்றனர்..அடுத்து வரும் பதிவுகளில் முயற்சி செய்கிறேன்.

சனி, அக்டோபர் 8

இடுப்பு அளவு!!!

நமது இடுப்பு சரியான அளவில் உள்ளதா எனத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அளவான இடுப்பு இருந்தால் பார்பதற்கும் அழகாகத் தெரியும் . இடுப்பு அளவு சரியான அளவில் இருந்தால் நமது உடம்பின் கொழுப்பும் கிட்டத்தட்ட சரியான அளவில் இருக்கும். இந்த பதிவினை ஏற்கனவே வண்ணச்சுவை என்ற தலைப்பின் கீழ் எழுதியிருந்தேன்...சரி நண்பர்களே! நம் இடுப்பு அளவினைக் கணக்கிடுவது எவ்வாறு?

வெள்ளி, அக்டோபர் 7

அறிவியல் ஆனந்தம் 1

சில சுவாரஸ்யமான அறிவியல் துணுக்குகளைப் பார்க்கலாம்.
* சில பேருக்கு வாயில் துர்நாற்றம் வீசும். அதற்கு காரணம் சாப்பிடும் உணவுப் பொருட்களாக இருக்கலாம் அல்லது உணவுகுழாயிலோ, மூச்சுக் குழாயிலோ கிருமி தொற்று ஏற்பட்டிருக்கலாம்.இதனை 'Halitosis'(bad breath) என்று பெயர்.

புரிந்தும் புரியாத புதிர்

      எங்கள் ஊர் தமிழாசிரியர் ஒரு புதிர் சொன்னார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பதில் தெரிந்தால் கருத்துரையில் தெரிவியுங்கள்.

புதன், அக்டோபர் 5

சண்டை போடாத மனைவி!!!

    புது டிரைவர் காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். அவருடைய முதலாளி டிரைவரின் தோளைத் தொட்டார். டிரைவர் அலறி விட்டார். முதலாளி ஏன் இப்படி அலறுகிறாய் ? எனக் கேட்டார். நான் 10 வருஷமா பிணத்தைக் கொண்டுபோகிற வண்டிய ஓட்டிக்கிட்டிருந்தேன்...அதான் கொஞ்சம் பயந்துவிட்டேன் என்றார்.
                       *                   *                   *                  *                         *

செவ்வாய், அக்டோபர் 4

கொஞ்சம் கடி...கொஞ்சம் சர்தார்ஜி

சர்தார் 1:இந்த மெஷின் வாங்கினா உங்க வேலை பாதி குறையும்.
சர்தார் 2 : அப்போ 2 கொடுங்க.
     *           *             *             *              *
சர்தார் ஒரு பெண்ணிடம் போய் ஐ லவ் யூ சொன்னார். அந்தப் பெண்ணோ நான் உங்களை விட ஒரு வயது இளையவள் என்றாள். உடனே சர்தார் அப்போ அடுத்த வருஷம் உன்னையை நான் லவ் பண்றேன் என்றார்.

திங்கள், அக்டோபர் 3

வண்ணச்சுவை

        சில காய்கறிகள் நல்ல அடர்த்தியான வண்ணங்களைக் கொண்டிருக்கும். சிலவற்றில்  பலவிதமான  சுவைகள்  இருக்கும்.    ஒவ்வொரு   வண்ணமும், சுவையுமே உடல் நலத்திற்கு நல்லது. வண்ணக்காய்கறிகள் கொண்டிருக்கும் நலன்கள் என்னென்ன?

பாத்திரங்களின் அளவுகள்

          நாம் அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரங்களின் அளவுகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.சில நேரம் சமையல் குறிப்பு பார்த்து சமையல் செய்யும் போது 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் உபயோகிக்கவும் என்றிருக்கும்... ஆனால் அது எவ்வளவு எனத் தெரியாது. 

தோலை உறிப்பான் தோழன்!

  'பாம்பென்றால் படையும் நடுங்கும்'.  பாம்பு விவசாயிகளுக்கு நிறைய நன்மை செய்கிறது. சூழ்நிலையைப் பாதுகாப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது... இன்னும்   இன்னும்...

ஞாயிறு, அக்டோபர் 2

கிமு - கிபி

   நாம் படிக்கும்போது கிமு - கிபி பற்றிய குழப்பம் ஏற்படும். கிமு என்பது கிறிஸ்து பிறப்பிற்கு முன்(Before Christ), கிபி என்பது கிறிஸ்து பிறப்பிற்கு பின் (After Christ) ஆகும்.

சனி, அக்டோபர் 1

SR கிருஷ்ணமூர்த்தி...தடைகளைத் தாண்டி

        நமக்கு ஒரு கட்டை விரல் மட்டும் இல்லையென்றால்... கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!!.சரி ஒரு கையே இல்லையென்றால்? அய்யோ அவ்ளோதான்!! நாம் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து விடுவோம். இங்கு ஒருவர் இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாமல் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் வாழ்வில் ஜெயித்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்.

தாவரவியல் - GENERAL STUDIES - Q & A அனைத்துத் தேர்வுகளுக்கும்

இப்போது கொஞ்சம் MULTIPLE CHOICE வினாவிடையைப் பார்க்கலாம். இவ்வகை வினாக்கள் தாவரவியல் சம்பந்தமான அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் உதவும்...வாழ்த்துக்கள்...

 1. Excessive elongation of plant stem is due to:
(a) Cytokinin
(b) GA
(c) ABA
(d) IAA
Ans. (b)
2. The genetic material found in plant virus is:
(a) DNA
(b) RNA
(c) Both (a) and (b)
(d) None of these
Ans. (b)

இந்திய ட்ராபிக்

       நம் நாட்டில் வண்டி ஓட்டுவது...அதுவும் சிக்னலை மதிக்காமல் ஓட்ரதுனா சும்மவா? இத்தனை ட்ராபிக்கையும் மீறித்திறமையாக வண்டி ஓட்ட நம்மால் மட்டும்தான் முடியும். சும்மா கலக்குங்க குடிமக்களே!!!

செம காமெடிங்கோ...

           கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ கிளிப்பைப் பாருங்கள். நிச்சயம் சிரிப்புக்கு கியாரண்டி உண்டு. வயிறுவலித்தால் நான் பொறுப்பல்ல.

வெள்ளி, செப்டம்பர் 30

தாவரவியல் பெயர்கள்




அல்லி  - Nymphaea pubescens
அரளி   - Nerium indicum
அரசு  -Ficus religiosa
அருகம்புல்    -Cynodon dactylon
அசோகா   - Saraca asoca
ஆதாலை  - Jatropha gossypifolia

நீரில் மிதக்கும் ஊசி

நீரில் மிதக்கும் ஊசி
        மாணவர்களுக்குப் பரப்பு இழுவிசையை பற்றிக் கற்று கொடுக்கும் போது இதைச் செய்து காண்பிக்கலாம். ஒரு கண்ணாடி டம்ளரில்  நீரை நிரப்பவும். அதில் மேல்பரப்பில் டிஸ்யூ பேப்பரை கிழித்துவைத்து அதன் மீது ஊசியை வைக்கவும்.

இராஜை நந்தனின் கவிதைகள்...II

இராஜை நந்தனின் கவிதைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன. அவற்றில் சிலவற்றின் தொகுப்பு அவரின் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றது.

    
பேச நினைத்த அத்தனையும்
வென்று விடும் மௌனம்
நமக்கான சந்திப்பில்
                      -  செம்மலர்

வியாழன், செப்டம்பர் 29

வேடிக்கையான தற்கொலை...

       ஹாய் ஃபிரண்ட்ஸ்....  வாழ்க்கையில நிறைய பிரச்சினை. அவனவன் லெவலுக்கு பிரச்சினைகள் இருக்கு. பிரச்சினை இல்லாத மனிதன் யார்?
கண்டிப்பாக யாருமில்லை... பிரச்சினை இல்லையென்றால் அவன் மனிதனும் இல்லை. அப்போ கடவுளா? சாரி.. அவருக்குத்தான் நிறையப் பிரச்சினைகள் என நமது புலனாய்வுத்துறை கூறுகிறது. மனிதனுடைய பிரச்சினைகளை நினைத்தே அவருக்குப் பிரச்சினைகள்.

காமெடி டைப்ரைட்டிங்....

இந்த வீடியோவைப் பார்த்து நீங்களும் டைப்ரைட்டிங் எளிதாகப் பழகலாம். வாருங்கள் பார்த்துப் பழகுங்கள்.
 

புதன், செப்டம்பர் 28

டிகிரியோ டிகிரி

               வெப்பநிலை அளவிடுதல் பற்றிய ஒரு சிறப்பு வெளியீடு. என்.சொக்கன் அவர்கள் எழுதிய கட்டுரை உதவியுடன் இந்த வெளியீடு. ஒரு இடத்தில் இரண்டு   மாணவர்கள்   அமர்ந்திருக்கிறார்கள்.    ஒரு பெரியவர் வருகிறார்.இன்னைக்கு ரொம்ப வெயிலா இருக்கே!! என்கிறார். முதலாமவன் ஒரு கருவியை உற்றுப் பார்க்கிறான்.

தாவரவியல் - கூடுதல் தாவரவியல் வினா விடைகள்.

01.  Soyabean contains a high degrees of proteins
02. The age of a tree can be determined by counting the growth rings of its stem
03. Ground becomes slippery during the rainy season due to green algae
04. Which one of the following is a useful functional association between fungi and the roots of higher plants?mycorrhiza

தாவரவியல் - GENERAL STUDIES - Q & A

1. The gas evolved by leaves during photosynthesis is oxygen
2. After fertilization ovary is transformed into fruit
3. Green trees of the forests are generally called as food chain primary producers
4. Streptomycin was discovered by  waksman

தாவரவியல் - GENERAL STUDIES - Q & A


1. One of the following is responsible for smut disease ustilago
2. Sexual reproduction is about in blue-green algae
3. Algin is obtained from brown algae
4. The virus which attacks E.coli is termed coliphage
5. Laminaria is an important source of iodine
6. ‘Pond silk’ is the common name of spirogyra
7. Pneumonia is caused by one of the following bacteria
8. Cotton fibre is obtained from the fruit
9. The largest producer of groundnut is India
10. India’s largest mineral resource is coal

செவ்வாய், செப்டம்பர் 27

இராஜை நந்தனின் கவிதைகள்...


தூரம் எனினும் 
தொட்டுவிட முடிகிறது
குளத்தில் நிலா!
----------------------------------------

மயக்கமா? குழப்பமா?

        'மனம் சொல்கிறபடியெல்லாம் கேட்டால் மனிதன் மகிழ்ச்சியோடு வாழலாம்!'
         இது ஒரு மனிதனின் நம்பிக்கை. மனம் சொல்லியது... 'அழகான வீடு ஒன்றைக் கட்டிக் கொள்!'
          அந்த மனிதன் அழகான வீட்டைக் கட்டிக் கொண்டான்.இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரம். அதை ஒட்டினாற் போல மிகப் பெரிய ஏரி. சுற்றிலும் பசுமையான மரங்கள். திரும்பிய இடமெல்லாம் வண்ணவண்ணப் பூக்கள். இவற்றின் நடுவே அந்த வீட்டை உருவாக்கினான்.

தாவரவியல் - GENERAL STUDIES - Q & A


1.Which one of sthe following diseases is caused by viral infection? jaundice
2. Symbolic nitrogen fixation is done by Rhizobium
3. Lack of which element makes the plant insectivorous?Nitrogen

தாவரவியல் - GENERAL STUDIES - Q & A


1. Which metal is present in green leaves? Magnesium
2. Pollinium found in the family Asclepiadaceae and Orchidaceae
3. Legume root nodule contains a protein pigment known as Leghaemoglobin

தாவரவியல் - GENERAL STUDIES - Q & A

கூடுதல் தாவரவியல் வினா விடைகள்.படித்துப் பயன் பெறுங்கள்.
1. Decomposers are:
(a) Autotroph
(b) Saprotroph
(c) Heterotroph
(d) Autoheterotroph
Ans. (c)

2. In a food chain, lion is a:
(a) Producer
(b) Primary consumer
(c) Secondary consumer
(d) Tertiary consumer
Ans. (d)

ஞாயிறு, செப்டம்பர் 25

கொஞ்சம் நல்ல கதைகளைப் பற்றி....

         உலகெங்கும் கல்வியாளர்களின் மனசாட்சியைப்  புரட்டிப் போட்டத்  தமிழில்  ஒரு   இலட்சம்    பிரதிகள் விற்பனையான 8 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட  ஒரு குறுநாவல் ஆயிஷா. 1964ல் லால்குடியில் பிறந்த 2008ல் டாக்டர்  ராதாகிருஷ்ணன்   விருதுபெற்ற    ஆசிரியர் இரா.நடராசன் அவர்கள் எழுதிய நூல்.    

இந்தப் புதிருக்கு பதில் சொல்லுங்க பிளீஸ்...

           இது அவ்வளவு பெரிய புதிர் இல்ல. உங்களுக்கு இது சாதாரணம். ஒரு நிகழ்ச்சியை சொல்றேன். பொறுமையா கேளுங்க. அப்புறமா இதுலயிருந்து ஒரே ஒரு கேள்வி.  பதிலை சொல்லிருங்க. 

மாறிப்போச்சு...

பார்த்து ரொம்ப நாளாச்சு
தூரக்காற்றில்
மெல்ல சலசலக்கும்
ஒற்றைப்பனை.

பால்காரனின்
வருகையில்
ஒலியெழுப்பி
கன்றுக்குட்டிகளின்
மடிமுட்டலில் அடங்கும்
கொல்லை பசுக்கள்.

சனி, செப்டம்பர் 24

நகைச்சுவையான பாடல் ஒன்று...

இந்தப் பாடலைப் பார்த்தால்  கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்...

என் நெஞ்சிக்குள்ளே... பாடல்

அருமையான பாடல் கேட்பதற்கும்...பார்ப்பதற்கும்...

இந்தியத் திட்ட நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

                  இந்தியா  ஒரு  பெரிய  நாடு.  எனவே  ஒரே  மாதிரியான    நேரம் தேவைப்படுகிறது.  இல்லையெனில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நேரம் இருக்கும். இதனால் அதிகப்படியான குழப்பங்கள் ஏற்படும். இந்த குழப்பத்தைத் தீர்க்க அலகாபாத் வழியாகச் செல்லும் தீர்க்க கோடு (82.30 டிகிரி) இந்தியத் திட்ட நேரத்தைக் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

பிரிட்னி ஸ்பியர்ஸின் கலக்கல் டான்ஸ்


பெண்ணின் ஏக்கம்...

அள்ளிக் கொடுக்க வேண்டாம்
அரண்மனையில் பாகம் வேண்டாம்
அன்பான வார்த்தை சொல்லி - என்னை
அரவணைத்தால் போதும்.

வெள்ளி, செப்டம்பர் 23

கணவர் எங்கே...

         
      ஓர் ஊரில் ஒரு கணவன், மனைவி.
      அவர்களுக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு கவலை இருந்து வந்தது. அதாவது அவர்களுக்குக் குழந்தை இல்லை.
      என்ன செய்வது என்று யோசித்தவர்கள் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி ஒரு ஆன்மீகப் பெரியவரைப் போய் பார்த்தார்கள்.
      "ஐயா! எங்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்!" என்று கேட்டுக் கொண்டார்கள்.
      அவர் சொன்னார்.
   

வியாழன், செப்டம்பர் 22

தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளில் தற்போதைய கல்வி கற்கும் முறை

அரையாண்டு ஒரு பெருங்குற்றம்
முழு ஆண்டு ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
     தற்போதைய  மாணவனின் மனநிலை இதுதான். இருந்தாலும் அரசாங்கம் மாணவர்கள் அனைத்துத் திறன்களையும்  எந்த முறையிலாவது அடைய வேண்டும் என நினைக்கிறது. இதனால் கொண்டு வரப்பட்டத் திட்டம் செயல்வழிக்கற்றல் (ABL) .ACTIVITY BASED LEARNING  இது கிண்டலாக  அட்டை BASED LEARNING  என அழைக்கப்படுகிறது. இதைப்பற்றி தொடக்கநிலை ஆசிரியர்களைத் தவிர எத்தனை பேருக்குத் தெரியும்.

அதற்கும் அப்பால்....

நிமிடத்தில் 
நூறு ஹைக்கூ
முடியுமா? என்றாய்!

அதற்கும் அப்பால்....

காலை இளம் வெய்யில் நேரம் காட்டுக்குப் போயிருப்ப
மாட்டுக்குத் தட்டையறுத்து சும்மாடில் கட்டி வருவ
ஊர்கிணத்து தண்ணியெடுத்து குழுதாடி நிரப்பிவப்ப
ஊர்சனங்க சுளுக்குக்கெல்லாம் உருவியேதான் நீ விடுவ!

புதன், செப்டம்பர் 21

சாமியாருமா?

       ஒரு கோயில் மண்டபம். அங்கு,கடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார் சாமியார் ஒருவர்.நிறையப் பேர் உட்கார்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
        இதை   மேலே  இருந்து    கவனித்துக்கொண்டு  இருந்தார் கடவுள்.   "இந்த மனிதர்கள் எப்பவும் நம்மைப் பற்றியே பேசுகிறார்களே!" என்று நினைக்கும்போது கடவுளுக்குப் பெருமையாக இருந்தது.
            'சரி, நேரில் போய் அவர்களைப் பார்த்துவிட்டு வரலாம்' என்று சாமியார் பேசிக்கொண்டு    இருந்த     கோயில்    மண்டபத்தின்   அருகே வந்து சேர்ந்தார். ஆலயத்தின் வெளியே இருந்த ஓர் அரச மரத்தின் அடியில் நின்றார்.

செவ்வாய், செப்டம்பர் 20

ருசிக்கத் தெரிந்த குரு...

இந்த உலகத்துல வாழ்ந்து என்ன சுகத்தைக்கண்டேன்?" என்று அலுத்துக் கொள்கிறவர்கள் ஏராளம்!.  
"ஆகா...என்ன அற்புதமான உலகம்!" என்று ஆனந்தப்படுபவர்கள் குறைவு!
ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு எல்லாமே சுகம்தான்!
இங்கிலாந்து நாட்டில் ஒரு கவிஞர் இருந்தார். அவர் பெயர் "ஜார்ஜ் பர்ன்ஸ்".
அவருக்கு 95-வது பிறந்த நாள்.
நண்பர்கள் எல்லோரும் வந்தார்கள். வாழ்த்தினார்கள்.
ஒரு நண்பர் கேட்டாராம்:

நன்றே... இன்றே...

          ஒரு    பணக்காரர்    தன்     குடும்பத்துடன்      தலயாத்திரை புறப்பட்டார்.எத்தனையோ புனிதத்தலங்கள்! சில பார்த்தாலே முக்தி தருவன. சில நினைத்தாலே முக்தி தருவன. அந்த வரிசையில் காசியைப்பற்றி, அங்கு இறந்தாலே 'முக்தி' என்பார்கள்.
          அந்த பணக்காரர் காசிக்கு வந்தார். புனித கங்கையைத் தரிசித்தார். அதன்பின்,    அக்கரைக்குச்    செல்ல   அனைவரும்   படகில்      ஏறினர். படகுப்பயணத்தின்போது, புனித கங்கை நீரைத் தொட விரும்பி வளைந்து குனிந்த அந்தப் பணக்காரர், தவறி கங்கை ஆற்றில் விழுந்துவிட்டார். நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிருக்குப்போராடினார்.

தமிழில் உச்சரிப்புகள்..

தமிழில் சில வார்த்தைகளில் வரும் இணைப்பினை நமக்கு உச்சரிக்கத் தெரிவதில்லை. உதாரணமாக "பு" என்ற எழுத்தில் "ப"வுக்கு கீழே இழுக்கப்பட்டுள்ள கோட்டினை எவ்வாறு உச்சரிப்பது. இது போன்று நிறைய எழுத்துக்கள் உள்ளன.அவற்றினை இங்கு பார்ப்போம்.

BOTANY - OBJECTIVE Q & A


தாவரவியல் Q & A - போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு....

பிடித்த பாடல்... கோவிந்தா கோவிந்தா


சித்திர செவ்வானம் பாடல்....


திங்கள், செப்டம்பர் 19

தாவரவியல் - GENERAL STUDIES - Q & A

இப்போது கொஞ்சம் MULTIPLE CHOICE வினாவிடையைப் பார்க்கலாம். இவ்வகை வினாக்கள் தாவரவியல் சம்பந்தமான அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் உதவும்...வாழ்த்துக்கள்...

தாவரவியல் - GENERAL STUDIES - Q & A

தாவரவியல் Q & A தொடர்ச்சி....

தாவரவியல் - GENERAL STUDIES - Q & A

தாவரவியல் வினாவிடைகள் தொடர்ச்சி...

தாவரவியல் - GENERAL STUDIES - Q & A

தாவரவியல் படித்துவிட்டு போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் அனைவருக்கும் இது உதவும். இவற்றில் நிறைய போட்டித்தேர்வுகளில் அதிகமாக கேட்கப்பட்டுள்ள வினாவிடைகள் உள்ளன. குறிப்பாக  TRB 'க்கு தயார் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

சனி, செப்டம்பர் 17

காமெடி டைம்

சர்தார்: பெரிய மழை காத்து, புயல் வருமாம். ரேடியோவில சொன்னாங்க.
மதராஸி : நீங்க கேட்டீங்களா?

பேனா நடத்திய பாடம்

என் பேனா குல்லா (மூடி) அணிந்திருக்கிறது.
எனவே இஸ்லாமியனா?
திறந்தால் முள் முடி (நிப்) தரித்திருக்கிறது
எனவே கிறிஸ்துபிரானா?

ரீமிக்ஸ்



வெள்ளி, செப்டம்பர் 16

நொறுக்ஸ்...

  1. மிக அதிகமான பொருட்களை கண்டுபிடித்து பேடண்ட் ரிஜிஸ்தர் செய்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் - 1069 பொருட்கள்.

யோசிங்க...

எல்லா ஆண்களும் ஒன்றுதான் என்கிற பெண்கள்...ஏன் ஒருவனை மட்டும் திருமணம் செய்கின்றனர்.

வியாழன், செப்டம்பர் 15

பிராணிகளின் வாழ்நாள்

ராயல் டாங்கன் ஆமை       - 200 ஆண்டுகள்
கழுகு                                     - 55 ஆண்டுகள்

நீர் யானை                           -  41 ஆண்டுகள்

கவிதை - ஜாலி

அன்பே எலிசா...
உன் காலில் என்ன கொலுசா...
நாம ஓடிபோலாமா நைசா...

கமலின் கலக்கல் பாடல்- ஜெர்மனியின்....


பிடித்த பாடல்- பார்த்த முதல் நாளே


கவிதை- வெளிச்சம்

தமிழனே பிறக்கும்போது...
எரிமலையாய் வெடித்து வராமல்...
அறுவை சிகிச்சையில்...
பிறந்தால்...
உன்னிடம் எப்படி எதிர்பார்ப்பது...
தமிழின உணர்ச்சி...
கருவறையும் இருட்டு..
கல்லரையும் இருட்டு...
வாழும்போதாவது வெளிச்சத்திற்கு வா...